தக்காளி விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை...!

தக்காளி   விலை வீழ்ச்சி;   விவசாயிகள் கவலை...!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 

ஓசூர் பகுதியில் தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி,பாகலூர், தேன்கனிக்கோட்டை உட்பட பகுதிகளில் பீன்ஸ், கேரட் ,பீட்ரூட், தக்காளி ,புதினா, கொத்தமல்லி, ஆகிய பயிர்களை விவசாயிகள் சாகுபடிசெய்து வருகின்றனர்  இந்த பகுதியில் விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஓசூர் பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்தனர். அதிக அளவில் சாகுபடி செய்ததால் ஓசூர் சந்தைக்கு வருத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி  விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த மாதம் தக்காளி கிலோ ரூ200-க்கு விற்கப்பட்டது. இதை நம்பி எல்லா பகுதிகளிலும் விவசாயிகள் தக்காளியை பயிரிட்டனர்.

கடந்த மூன்று மாதங்களாக தக்காளி விலை ஆகாயத்தை தொட்டது. இதைக் கண்ட விவசாயிகள் பலர் பயிரிட்டு தக்காளி அறுவடைக்கு வந்துள்ளதால், தக்காளியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது ஓசூர் சந்தைக்கு தக்காளி வருத்து அதிகரித்ததால் 20 ரூபாய்க்கும், 30 கிலோ பெட்டி 600க்கு  விற்கப்படுகிறது. தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் தற்போது தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள்  கவலை அடைந்துள்ளனர்.

இன்னும் வரும் நாட்களில் மேலும் தக்காளி விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில்   கூறப்படுவதால் வேதனை அடைந்துள்ள , அரசு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com