தரமற்ற மருந்துகள்; 143 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

தரமற்ற மருந்துகள்; 143 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

மருந்துகளின் தரம் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி 143 மருந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மைக்ரோனேஷியா மற்றும் மார்ஷல் தீவுகள் உள்ளிட்ட நாடுகளில் விற்கப்பட்ட இருமல் மருந்துகள் தரமற்றவையாக உள்ளன என அந்நாட்டு அரசுகளால் கண்டறிப்பட்டன. இந்த மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. மேலும் உலக சுகாதார நிறுவனமும் இந்திய தயாரிப்பு இருமல் மருந்துகள் தரமற்றவையாக இருப்பதாகவும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய இரசாயனங்கள் அதிக அளவில் கலந்திருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தது. இந்நிலையில் மருந்துகளின் தரம் குறித்து விளக்கம் அளிக்க கோரி 143 மருந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், நாடு முழுவதும் 162 மருந்து நிறுவனங்களில் தரக்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார். அதில், 66 நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப் பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், மருந்து நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com