மார்கரெட் ஆல்வா vs ஜக்தீப் தன்கர்: யாருக்கு வெற்றி வாய்ப்பு?

இரண்டு வேட்பாளர்களின் மதிப்பிடப்பட்ட வாக்கு சதவீதம் இன்னும் தெரியவில்லை என்றாலும், சுமார் 18 கட்சிகள் ஆல்வாவை ஆதரிக்கின்றன, 20 கட்சிகள் தன்கரை ஆதரிக்கின்றன.

மார்கரெட் ஆல்வா vs ஜக்தீப் தன்கர்: யாருக்கு வெற்றி வாய்ப்பு?

இந்தியாவின் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் இந்த மாதம் 10ம் தேதி முடிவடைகிறது.  புதிய குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளதுடன் நாளை மாலையே முடிவுகளும் அறிவிக்கப்படும்.

தேர்தல் முறை: 

நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியான இந்தியாவின் துணை குடியரசு தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவையின்  நியமன உறுப்பினர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கிய தேர்தல் கல்லூரியால் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தற்போது, ​​தேர்தல் கல்லூரியில் 790 உறுப்பினர்கள் உள்ளனர் - மாநிலங்களவையில் 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் 12 நியமன உறுப்பினர்கள் மற்றும் மக்களவையில் 543 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும்  இரண்டு நியமன உறுப்பினர்கள்.

துணை ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமானால், அவர் வாக்குப்பதிவில் 395 வாக்குகளுக்கு மேல் பெற வேண்டும். 

இரண்டு வேட்பாளர்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள்:

ஜகதீப் தன்கரை ஆதரிக்கும் கட்சிகள்:

பாரதிய ஜனதா கட்சி

சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே)

ஐக்கிய ஜனதா தளம் 

பகுஜன் சமாஜ் கட்சி 

பிஜு ஜனதா தளம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 

யுவஜன ஷ்ரமிகா ரைத்து காங்கிரஸ் கட்சி 

ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி

அசோம் கண பரிஷத் 

தேசிய மக்கள் கட்சி 

நாகா மக்கள் முன்னணி 

மிசோ தேசிய முன்னணி

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி

இந்திய குடியரசுக் கட்சி அத்வாலே
 
பாட்டாளி மக்கள் கட்சி
 
ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி 
 
அப்னா தால் சோனேலால் 

அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம்
 
தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனார் கட்சி

மேலும் படிக்க: யார் இந்த ஜெகதீப் தன்கர்? 

ஆல்வாவை ஆதரிக்கும் கட்சிகள்:

இந்திய தேசிய காங்கிரஸ்

ஆம் ஆத்மி கட்சி 

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 

தேசியவாத காங்கிரஸ் கட்சி
 
சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு)

தெலுங்கானா ராஷ்டிர சமிதி

திராவிட முன்னேற்றக் கழகம்
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

ராஷ்ட்ரிய ஜனதா தளம்

சமாஜ்வாதி கட்சி

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

ராஷ்ட்ரிய லோக் தளம்

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு 

விடுதலை சிறுத்தைகள் கட்சி

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி

கேரள காங்கிரஸ் மணி 


வாக்குப் பங்கு:

இரண்டு வேட்பாளர்களின் மதிப்பிடப்பட்ட வாக்கு சதவீதம் இன்னும் தெரியவில்லை என்றாலும், பாஜகவுக்கு மாநிலங்களவையில் 91 உறுப்பினர்களும், மக்களவையில் 303 உறுப்பினர்களும் இருப்பதால், தன்கருக்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ஜனதா தளம் (யுனைடெட்), பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி), அனைத்திந்திய அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம் மற்றும் சிவசேனா போன்ற பிராந்தியக் கட்சிகளின் ஆதரவையும் தன்கர் பெறுவதால் அவர்களின் ஆதரவுடன்,தன்கர்  515 வாக்குகளுக்கு மேல் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வெற்றிக்கு போதுமானது என கருதப்படுகிறது.

மறுபுறம், அல்வா சுமார் 190-200 வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது.

வெற்றி யாருக்கு?

குடியரசு துணை தலைவர் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி வேட்பாளராக காங்கிரஸின் மார்கரெட் ஆல்வாவை ஆதரிப்பதாக பல கட்சிகள் அறிவித்திருந்தாலும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநரான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தன்கருக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க:  மார்கரெட் ஆல்வா யார் ?


மாநிலங்களவையில் 16 எம்.பி.க்களும், மக்களவையில் 23 எம்.பி.க்களும் கொண்ட மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்,குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க முடிவு செய்துள்ளது.