செய்தியாளர்களின் கேள்விக்கு...எச்.ராஜா முன் கொந்தளித்த மாவட்ட பாஜக தலைவர்...!

செய்தியாளர்களின்  கேள்விக்கு...எச்.ராஜா முன் கொந்தளித்த மாவட்ட பாஜக தலைவர்...!

புதுச்சேரி, காரைக்காலில் செய்தியாளர் சந்திப்பின் போது, மாவட்ட பாஜக தலைவர் செய்தியாளரை ஒருமையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கருத்தரங்க கூட்டம்:

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே அம்பாள் சத்திரத்தில், காரைக்கால் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடியின் சாதனை மற்றும் கனவு திட்டங்கள் குறித்த கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கு கூட்டத்திற்கு முன்பாகவே, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் H.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

ஒரு கட்சிக்கு சாதகமாக பேசும் ஊடகம்:

காரைக்காலில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் H.ராஜா தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், செய்தியாளர்கள் பாஜகவிற்கு எதிராக கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த H.ராஜா, ஊடகங்கள் அனைத்தும் ஒரு கட்சிக்கு சாதகமாகவே செயல்படுவதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து, செய்தியாளர்கள் அனைவரும் கேள்வி கேட்பதற்கே  தகுதியற்றவர்கள் என அவர் கூறியது அங்கு சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. 

செய்தியாளர்கள் தொடர் கேள்வி:

H.ராஜாவின் வார்த்தை சலசலப்பை ஏற்படுத்திய போதும், செய்தியாளர்கள் விடாமல் கேள்விகளை அடுக்கினர். அதாவது, பாஜக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் புதுச்சேரி ஏன் இன்னும் வளர்ச்சி பெறவில்லை என செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/tamilnadu/Happy-Streets-event-every-week-on-every-road

செய்தியாளரை ஒருமையில் திட்டிய சேனாதிபதி:

செய்தியாளரின் கேள்வியால் ஆத்திரமடைந்த காரைக்கால் மாவட்ட பாஜக தலைவர் துரை. சேனாதிபதி, H.ராஜா முன்னிலையில் செய்தியாளரை ஒருமையில் பேசியதுடன் செய்தியாளரை வெளியேறு என ஒருமையில் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட மதத்தை குறித்து இழிவாகவும் பேசியுள்ளாதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பாஜகவினர் அவசர அவசரமாக செய்தியாளர் சந்திப்பை முடித்து கொண்டு வெளியேறினர்.

சந்தேகம்:

பாஜக மத அரசியல் நடத்துவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் எச்.ராஜா பேசியதும், மாவட்ட பாஜக தலைவர் செய்தியாளர்களை ஒருமையில் திட்டியதும் சற்று கவனிக்க வேண்டிய விஷயமாகவே இருக்கிறது.