3 மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி...வன்முறை வெடிக்குமா? பதற்றத்தில் போலீசார்...!

3 மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி...வன்முறை வெடிக்குமா? பதற்றத்தில் போலீசார்...!

கடலூர்,கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஆர் எஸ் எஸ் பேரணி இன்று மாலை நடைபெற இருந்த நிலையில், கடலூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அனுமதி வழங்கிய நீதிமன்றம்:

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தது. தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தலாம் எனவும், காவல்துறை அனுமதி வழங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டது.

பல்வேறு நிபந்தனைகள்:

ஆனால், காவல்துறை தரப்பில் சட்ட ஒழுங்கு பிரச்னைகளை காரணம் காட்டி, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நவம்பர் 6 ஆம் தேதி தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய அனுமதிப்பட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்தலாம் என்றும், அந்த ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு ஆர்.எஸ்.எஸ் தான் பொறுபேற்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளுடன் உத்தரவிட்டது.

இதையும் படிக்க: நாளைய ஆர்.எஸ்.எஸ். பேரணி திடீர் ஒத்திவைப்பு...ஏன் தெரியுமா? விளக்கம் இதோ!

பேரணியை ஒத்திவைத்த ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு:

இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறுவதாக இருந்த பேரணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிவித்தது. மேலும், உயர்நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதால் தான் பேரணியை ஒத்தி வைப்பதாகவும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட இணையப்பக்கங்களில் இதுகுறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. 

இன்று மாலை நடைபெறும் பேரணி :

இந்நிலையில் காவல்துறை அனுமதி வழங்கி முன்பு அறிவித்த கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஆர் எஸ் எஸ் பேரணி இன்று மாலை நடைபெறுவதாக தகவல் வெளியாகியானது. இதனால் அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றும், இன்று காலையும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, பேரணி மற்றும் ஊர்வலம் நடைபெறும் இடங்களை காவல்துறையினர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்படி, கடலூரில் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு, தேரடி தெரு, மற்றும் வரதராஜ கோவில் பெருமாள் வீதி ஆகிய இடங்களில் 2000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால், கடலூர் முழுவதும்  காக்கிமயமாக காணப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்.பேரணி தொடங்கியது:

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அறிவித்ததை போலவே கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கியது. அந்த வகையில், காலை முதலே காக்கிமயமான கடலூரில் 2000க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தேரடி தெரு, சன்னதி தெரு, நான்கு மாட வீதிகள் வழியாக தொடங்கிய ஆர்.எஸ்.எஸ் பேரணி நிறைவடைந்தவுடன், பொதுக்கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகவே, பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.


ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசியலில்   முக்கிய மாற்றங்கள் நிறைய ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். ஆட்சி மாற்றம், குடியரசு தலைவர் ஆட்சி அமல் என பல நிகழ்வுகளை கூறலாம்.  அந்த வகையில் ஜனவரி 27ல் தி  முக   முன்னாள் தலைவர்   மு.கருணாநிதி 3வது   முறையாக   முதலமைச்சராக பதவியேற்றார்.

அதி  முக பனிப்போர்:

எம்.ஜி.ஆர் மறைவுவிற்கு பிறகு அதி  முகவில் பனிப்போர் நிலவிய நிலையில் யார் அடுத்த   முதலமைச்சர் என்ற நிலையில் ஏற்பட்ட போது, அண்ணா மறைந்த போது தற்காலிக   முதலமைச்சராக இருந்த அதே நாவலர் நெடுஞ்செழியன் இடைக்கால   முதலமைச்சராக பொறுப்பேற்றார்.  

கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஆர். எம். வீரப்பன் உள்ளிட்டோரின்   முயற்சியால் எம்ஜியாரின் மனைவி ஜானகியை   முதலமைச்சராக்கினர். இதனையடுத்து அதி  முக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக உடைந்தது. அதனை தொடர்ந்து ஜானகி தலைமையிலான ஆட்சி ஆட்சி கலைக்கப்பட்டு ஜனவரி 30 1988 ல் குடியரசு தலைவர் ஆட்சி தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது.  பின் ஒரு ஆண்டுக்கு பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.  

நான்கு  முனைப் போட்டி:

மருங்காபுரி மற்றும்  மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.  1967ல் இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்ற   முனைப்பில் காங்கிரஸ் தனித்து களம் கண்டது. 14   முறை தமிழ்நாட்டிற்கு பிரச்சாரம் மேற்கொண்டர் என்பது குறிப்பிடதக்கது.  தி.  மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம்,   முஸ்லீம் லீக் மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி இடம்பெற்றிருந்தது. அதி  முக ஜானகி அணிக்கு திராவிடர் கழகம் ஆதரவளித்தது மேலும் நடிகர் சிவாஜி கணேசனின் தமிழ்நாடு   முன்னேற்ற கழகம் ஆதரவளித்தது. அதி  முக ஜெயலலிதா அணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவளித்தது.

வாய்ப்பை பயன்படுத்திய தி.  மு.க.:

13ஆண்டுகளாக ஆட்சியைக் கைப்பற்ற இயலாத கருணாநிதி தலைமையிலான தி.  மு.க. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தயாரானது.  அந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானதாக இருந்த கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதிகளாக அளித்தது

தி.  மு.கவின் வாக்குறுதிகள்:

தமிழ்நாடு மக்களின் கோரிக்கையாக இருக்கும் மாநில சுயாட்சியோடு கூடிய   முழுமையான கூட்டாட்சி   முறை என்பதை   முதல் தேர்தல் வாக்குறுதியாக அளித்தது தி.  மு.க.  இந்தி திணிப்புக்கு எதிராக எத்தகைய தியாகங்களையும் செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தது.  மத்திய அரசிலும் அதன் நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக வேலை வாய்ப்புகளில் தனி ஒதுக்கீடு தர வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துவோம் என வாக்குறுதியும் அளித்தது.

வெற்றியை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டு சரியான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியது. 232 தொகுதிகளில் 198 இடங்களில் தி  முக களமிறங்கியது. கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 21 இடங்களையும் ஜனதா தளத்துக்கு 10 இடங்களையும் இந்திய யூனியன் லீக்குக்கு 3 இடங்களையும் ஒதுக்கியது.

ஜெயலலிதா அணி:-

இரட்டை இலை சின்னம்   முடக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்தில் தேர்தலை சந்திக்க தயாரானது.    அஇஅதி  முகவின் ஜெயலலிதா அணி 196 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் 12 இடங்களிலும் போட்டியிட்டன.

ஜானகி அணி:

ஜானகியின் அஇஅதி  முக அணிக்கு இரட்டை புறா சின்னம் ஒதுக்கப்பட்டது.  ஜானகியின் அணி 175 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான தமிழக   முன்னேற்ற அணி 45 இடங்களிலும் போட்டியிட்டன.  நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஜானகிக்கு ஆதரவாக களம் இறங்கினார்.

மாத்தி யோசித்த காங்கிரஸ்:

மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மேலும் ஓராண்டுக்கு குடியரசு ஆட்சியை நீட்டித்ததோடு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.  சென்னை மறைமலை நகரில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி கருப்பையா மூப்பனாரை   முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது. இறுதியில் தி.  மு.க கூட்டணி 175 தொகுதிகளையும், காங்கிரஸ் 26 இடங்களிலும், ஜானகி அணி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அதி  முகவின் ஜெயலலிதா அணி 27 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. 

பதவியேற்பு விழா:

1973 ஆம் ஆண்டு தி  முக ஆட்சிக் காலத்தில் அன்றைய   முதலமைச்சர்   மு.கருணாநிதி சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது இறுதியில் திறப்பு விழாவிற்கான தேதியும் குறிக்கப்பட்டது. இந்நிலையில் தி  முக ஆட்சி கலைக்கப்பட்டு நெருக்கடி நிலை அமலுக்கு வந்தது. பின் அன்றைய  குடியரசு தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. அவ்விழாவிற்கு தி  முக தலைவரான கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கவில்லை.  1989 ல்   முதலமைச்சராக பதவியேற்க   மு.கருணாநிதி தேர்வு செய்த இடம் அன்று அவர் புறக்கணிக்கப்பட்ட அதே இடம்தான் வள்ளுவர் கோட்டம்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  மோதலுக்கு தயாராக இருப்பவரா   முதலமைச்சர்....  முரசொலியின் விளக்கம் என்ன?!!

மத்திய அரசு இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் பிழையுடன் இருந்ததை சுட்டிக்காட்டிய பிறகு திருத்தப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இணையதளத்தில் பிழை :

தமிழ்நாட்டில் சமீபகாலமாகவே, தமிழ்நாடா? தமிழகமா? என்ற சர்ச்சை நடந்து வரும் நிலையில், மத்திய அரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் TamilNaidu என்று குறிப்பிடப்பட்டிருந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இணையவழி வாக்கெடுப்பு :

அதில், ”தில்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் http://mygov.in தமிழ்நாட்டின் பெயர் TamilNaidu என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது!

தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டிருப்பது எழுத்துப்பிழை என்று மட்டும் கருதி கடந்து செல்ல முடியாது. அரசின் இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவை. அவற்றில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்கக்கூடாது. இது உலக அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரைத் தேடித் தரும்!

தேவையின்றி சர்ச்சைக்குள்ளாகும் தமிழ்நாடு பெயர் :

தமிழ்நாடு பெயர் அண்மைக்காலமாக தேவையின்றி சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில், மத்திய அரசு இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது பல்வேறு வகையான ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்த பிழை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்!

இதையும் படிக்க : அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே...!

http://mygov.in தளத்தில்  நடந்த இந்த பிழைக்கு அதை நிர்வகிக்கும் தேசிய தகவலியல் மையம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பெயர் பிழையாக பதிவு செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

கண்டனம் தெரிவித்த ராமதாஸ் :

மத்திய அரசின் http://mygov.in இணையதளத்தில் தவறாக  TamilNaidu என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பெயர், சுட்டிக்காட்டப்பட்ட பிறகு  சற்று முன் TamilNadu என்று திருத்தப்பட்டுள்ளது. இந்த பிழைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.  ” இவ்வாறு அந்த பதிவில் டாக்டர் இராமதாஸ் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார்.

பிழையை திருத்திய மத்திய அரசு :

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த சர்ச்சை குறித்து மீண்டும் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில் ”மத்திய அரசின் http://mygov.in இணையதளத்தில் தவறாக  TamilNaidu என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பெயர், சுட்டிக்காட்டப்பட்ட பிறகு சற்று முன் TamilNadu என்று திருத்தப்பட்டுள்ளதாகவும், இந்த பிழைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மோதல்களை தவிர்ப்பவரே தவிர, மோதலுக்கு தயாராக இருப்பவர் அல்ல.  ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்றது குறித்து முரசொலியில் விளக்கம்.

இன்றைய முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையின் ஒரு பகுதியில், 

ஆளுநருக்கும் அரசுக்கும் அண்மை காலத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அதனால் ஆளுநரை விழாவுக்கு அரசு அழைக்குமா ? குடியரசு நாளில் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு முதலமைச்சர் செல்வாரா ? என்ற சந்தேகங்கள் சூழ்ந்திருந்தன.

அதற்கு ஆளுநரும் இடம் கொடுக்கவில்லை, தேநீர் விருந்துக்காண அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற அரசியலமைப்பு சட்ட ரீதியான பெயரை பதிவு செய்ததுடன் முதலமைச்சருக்கு அழைப்பிதழை முறைப்படி அனுப்பி தொலைபேசியில் முதல்வருடன் பேசி ஆளுநர்  அழைப்பு விடுத்தார்.  முதலமைச்சரும் பிற பிரச்சனைகளில் கையாளும் பெருந்தன்மையுடன் கூடிய பெரும்பான்மையான அணுகு முறையினையே குடியரசு நாளை ஒட்டிய நிகழ்வுகளிலும் பின்பற்றினார்.

நமது முதலமைச்சர் மோதல்களை தவிர்ப்பவரே தவிர, மோதலுக்கு தயாராக இருப்பவர் அல்ல.  அவருக்கு ஒவ்வொரு பிரச்சனையின் பரிணாமம்தான் முக்கியமே அன்றி, அதற்கு காரண கர்த்தாக்களைப் பற்றி கவலைப்படவோ, அலட்டிக் கொள்ளவோ மாட்டார்.  எப்போதும் அவரது கண்களுக்கு தெரிவதெல்லாம் சீரான ஆட்சி நிர்வாகம் மற்றும் வெகு மக்களுக்கு நாளும் ஆற்ற வேண்டிய நற்பணி தான். 

இவ்வாறு கூட்டணி கட்சிகள் புறக்கணித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்து கொண்டமைக்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  நான்காயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகள்......

திரையில் மாஸாக சண்டை காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்கு, தங்கள் உயிரை பணயம் வைத்து நிஜத்தில் பல சாகசங்கள் புரிந்து நல்லப்பெயர் வாங்கி கொடுப்பது இந்த ஸ்டண்ட் கலைஞர்கள்  தான். அப்படி இந்திய சினிமாவில் நீண்ட காலமாக பிரபல ஸ்டண்ட் இயக்குனராக  பணியாற்றியவர் தான் இந்த ஜூடோ ரத்னம்.  

இவர் ஒரு கம்யூனிஸ்ட் :

பல முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து பணியாற்றி சினிமாத்துறையில் ஸ்டண்ட் மாஸ்டராக தனக்கான ஒரு இடத்தை பிடித்த இவர், ஒரு கம்யூனிஸ்ட் என்பதை யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். அட ஆமாங்க, பொதுவுடைமை கொள்கைகளால் அரசியலில் ஈர்க்கப்பட்ட ஜூடோ ரத்னம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக செயல்பட்டு வந்துள்ளார். கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட ஜூடோ, இறுதிவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை மறக்காமல் வாழ்ந்துள்ளார் என்றால் அது மிகையாகாது. 

ஜூடோ மறைவு :

இப்படி கலைத்துறையில் கின்னஸ் சாதனை படைத்து, அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளில் இருந்து மாறாமல் தனது உறுப்பினர் பதவியை சிறப்பாக செய்து வந்த திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

பயம் என்பது கிடையாது:

இந்நிலையில் இவரது உடலுக்கு பல்வேறு திரைப்பலங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  அதில் கம்யூனிஸ்ட் தரப்பில் அஞ்சலி செலுத்துவபவர்கள், ஜீரோ என்ற அமைப்பை சண்டை காட்சியில் அறிமுகப்படுத்தியதன் காரணமாகவே இவருக்கு ”ஜூடோ ரத்னம்” என்ற பெயர் வந்ததாகவும், எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை மறவாதவர், தனது இறுதி மூச்சு வரை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக வாழ்ந்தவருக்கு பயம் என்பது துளியும் கிடையாது, எதுவாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்வார் என்றும் கூறி வருகின்றனர்.   

இதையும் படிக்க : சட்டுன்னு சரிந்த அதானி குழுமத்தின் பங்கு...பதறிப்போன நிறுவனம்...காரணம் இவர்கள் தானா?

அதானி குழுமத்திற்கு மிக அதிக அளவில் கடன் உள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டதையடுத்து, அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.46,000 கோடி சரிந்துள்ளது.

உயர்ந்த அதானியின் சொத்து மதிப்பு :

அதானி குழுமத்தின் பங்கு சந்தை கடந்த சில ஆண்டுகளாகவே உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.

வீழ்ச்சியடைந்தது பங்கு மதிப்பு :

இந்நிலையில் தான் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையை தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு தற்போது, ரூ.46,000 கோடி சரிந்து வீழ்ச்சியை கண்டுள்ளது. 

தொடர் பங்கு வெளியீட்டின் வாயிலாக, 20அயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்டவும், உலகளவிலான முதலீடுகளை ஈர்க்கவும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த ஆய்வறிக்கை வெளியாகி சந்தையில் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

ஒரே நாளில் சரிந்த பங்கு மதிப்பு :

முந்தைய தினமான ஜனவரி 24ஆம் தேதி அதானி நிறுவனங்களின் சந்தை மதிப்பு 19.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஹிண்டென்பர்க் ரிப்போர்ட் வெளியானதை தொடர்ந்து ஜனவரி 25ஆம் தேதி அதானி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 18.23 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.   

அதானி குழுமம் விளக்கம் :

இந்நிலையில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை குறித்து பேசிய அதானி குழுமம், எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையானது ஆதாரமற்றது என்றும், தீங்கிழைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, இதுகுறித்து நிறுவனத்தில் சார்பில் அதன் செகரட்டரியும், சட்ட பிரிவின் இணை தலைவருமான ஜாட்டின் ஜலுந்த்வாலா கூறிய போது, “அதானி குழுமத்தின் மதிப்பை குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது. எங்கள் சரிவிலிருந்து ஹிண்டன்பர்க் ஆதாயமடைய முயற்சிக்கிறது. இந்தத் தவறான அறிக்கையால், அதானி குழுமத்தின் பங்குதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியப் பங்குச் சந்தையிலும் இந்த அறிக்கை பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது. 

அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 819 சதவீதம் அதிகரித்துள்ளது. 120 பில்லியன் டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு உலக பில்லியனர்கள் பட்டியலில் அதானி 3-ம் இடத்தில் உள்ளார். இந்தச் சூழலில் தற்போது வெளிவந்திருக்கும் ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி குழுமத்தின் வளர்ச்சியை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. எனவே, தற்போது ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருப்பதாக” தெரிவித்துள்ளார்.