அருண்மொழிவர்மன் எப்படி பொன்னியின் செல்வன் ஆனார் தெரியுமா?

அருண்மொழிவர்மன் எப்படி பொன்னியின் செல்வன் ஆனார் தெரியுமா?

சோழ ராஜ்ஜியம் இருப்பதிலேயே, மிகப்பெரிய ராஜ்ஜியம் என சொல்வதில் எந்த மிகைமையும் இல்லை. ஏன் என்றால், இன்றைய தென்னிந்தியா மட்டுமின்றி, இன்றைய, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய பகுதிகளைக் கைப்பற்றி செழிப்பாக ஆட்சி செய்தது சோழ பரம்பறை தான். அத்தகைய சோழ பரம்பரை, முன்னிருந்தே இருந்தாலும், மீண்டு எழுந்து தலையோங்கியது 9ம் நூற்றாண்டில் தான். சோழ ராஜ்ஜியம் உருவாகி 1200 ஆண்டுகளுக்கு பிறகு, முழு வீச்சில் இறங்கி, ஒரு மாபெரும் ஆட்சியை உருவாக்கியது விஜயாலய சொழன் காலத்தில் தான்.

அவரது பரம்பரை வந்த ராஜனுக்கு ராஜனான, முதலாம் ராஜ ராஜ சோழன், 985 - 1014 ஆண்டுகளில் தனது பொற்கால ஆட்சியை நடத்தினார். அவர் இறந்து, அடுத்து பல பல சோழ மன்னர்கள் ஆட்சி முடிந்து, சோழ ராஜ்ஜியம் கவிழ்ந்து, முகலாயர்களுக்கு பின் ஆங்கிலேயர்கள் வந்து சென்று,  இன்று குடியரசு ஆட்சி நடந்து வரும் போதிலும், பேர் போன அரசன் என்றால், அது ராஜ ராஜன் என்று தான் கூறுவர் மக்கள். இத்தகைய ராஜ ராஜன், எடுத்ததும் ராஜன் ஆகவில்லை. அவர் உருவான கதையை, புனைப்பு பின்னணியோடு கூறும் மாபெரும் பிரம்மாண்ட, வரலாற்றுக் காவிய படைப்பு தான் 1950களில் வந்த, கல்கி-யின் பொன்னியின் செல்வன்.

பல ஆண்டுகளாக, இந்த மாபெரும் படைப்பை திரைக்குக் கொண்டு வர, பல சினிமா ஜம்பவான்கள் முயற்சி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த பட்டியலில் முதலாவதாக இருப்பது புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் தான். அவர் தொடங்கி, இன்று வரை பலரும் இந்த கதையை திரைக்கு கொண்டு வர முயற்சி செய்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அந்த முயற்சியில் முதலடி எடுத்து வைத்தவர் தான் புதுமை இயக்குனர் மணிரத்னம்.

சுபாஸ்கரனின் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும், மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. விக்ரம், ஐஸ்வரியா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வரியா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா, பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரஹ்மான், சரத் குமார், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், கிஷோர் போன்ற மாபெரும் நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கும் இந்த படம், தமிழில் மட்டுமின்றி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என ஐந்து மொழிகளில், வரும் செப்டம்பர் 30ம் தேதி உலகளவில் வெளியாகிறது.

இந்த படத்தில் பல பெரும் முக்கிய கதாபாத்திரஙள் இருந்தாலும், தலைப்பு, பொன்னியின் செல்வன் என வைக்கப்பட்டிருப்பதால், பொன்னியின் செல்வன் என அழைக்கப்படும் ராஜ ராஜ சோழன் தான் இந்த கதையின் கதாநாயகன் என பலருக்கும் தோன்றும். ஆனால், உண்மையான கதாநாயகன், ராஜ ராஜனோ, அல்லது வல்லவராயன் வந்தியத்தேவனோ இல்லை. கதை தான் இங்கு ஹீரோ.

எதுவாக இருந்தாலும், முதலில், ராஜ ராஜன் பற்றிக் கூறும் கதைக்கு, எதற்கு பொன்னியின் செல்வன் என பெயர் உருவாகியுள்ளது என கேள்விகள் உங்களுக்குக் கிளம்பியிருக்கும். அதற்கு காரணம் உண்டு. அதைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

ஒரு முறை, சுந்தர சோழன், தனது மனைவி வானவன் மாதேவி மற்றும், மூன்று குழந்தைகளான, ஆதித்த கரிகாலன், குந்தவை தேவி மற்றும் இளையவர் அருண்மொழி வர்மனுடன் காவிரி நதியில் படகில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, படகு சிறிது நிலை தடுமாறிய போது, சிறியவர் அருண்மொழி காவிரி நதியில் விழுந்திருக்கிறார். பயத்தில் பதை பதைத்து போன சோழ ராஜர் சுந்தரர், நதியில் குதித்து அருண்மொழியைத் தேட சொல்லி கட்டளை இட்டார். அடித்து செல்லும் செழிப்பான காவிரி நதியில், சிறு குழந்தையை எப்படி கண்டுபிடிப்பது என்ற கேள்வி மிகவும் பயத்தைத் தந்தது.

வெகு நேரம் தேடியும், அருண்மொழி கிடைக்காததால், கதறி அழுத சுந்தர சோழரின் கைகளில், ஒரு பெண், தலை விரித்த கோலமாக அருண்மொழியை ஒப்படைத்தார். பின், நதியில் மூழ்கி காணாமல் போனார். ராஜ வாரிசை காப்பாற்றி தந்ததற்கு பரிசு கூட எதுவும் கேட்காமல், காணாமல் போன அந்த பெண்ணை பல முறை தேடியும் கிடைக்கவில்லை. உடனே, காவிரி நதியே பெண்ணாக வந்து உயிர்த்தெடுத்த சிறுவன் தான் அருண்மொழி என்ற காரணத்தால் தான் அருண்மொழி, காவிரி செல்வன் என அழைக்கப்பட்டார். ஆனால், அக்காலத்தே காவிரி என்ற பெயர் இல்லை அந்த நதிக்கு. அந்த செழிப்பான, மூன்று தேசத்திற்கு நீர்வார்க்கும் நதியின் பெயரானது பொன்னி. அதனால் தான் அருண்மொழி வர்மன் பொன்னியின் செல்வனாக போற்றப்பட்டார்.

இது தான் அருண்மொழி வர்மன் பொன்னியின் செல்வன் ஆன கதை!!! இந்த கதாபாத்திரத்தில், நடிகர் ஜெயம் ரவி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com