மூத்த தலைவர்களை வெளியேற்றும் காங்கிரஸ்....இளைஞர்களை கொண்டு மீண்டும் கட்டமைக்கப்படுமா!!!!

மூத்த தலைவர்களை வெளியேற்றும் காங்கிரஸ்....இளைஞர்களை கொண்டு மீண்டும் கட்டமைக்கப்படுமா!!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பியுமான குலாம் நபி ஆசாத் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாக சோனியா காந்தியிடம் கடிதம் அளித்துள்ளார்.  மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.  ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தேர்தல் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய ராஜினாமாவை அறிவித்துள்ளார் குலாம் நபி ஆசாத்

செல்வாக்கை இழந்த காங்கிரஸ்:

இந்தியாவிற்கு எது சரியானது என போராடுவதற்கான திறனை காங்கிரஸ் இழந்து விட்டதாகவும், அதனால் கட்சிக்கும் தனக்கும் இடையிலான அரை நூற்றாண்டு தொடர்பை மிகுந்த மனவேதனையுடன் முடித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் 2013-ம் ஆண்டு  துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்ட  பிறகு அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள்  ஓரங்கட்டப்பட்டு, தனிப்பட்ட நலனுக்காக வேலை செய்யக்கூடிய அனுபவம் இல்லாத இளைஞர்களுக்கு  முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.  

கோட்டரி குழு:

கோட்டரி என்றழைக்கப்படும் பயிற்சி குழுவின் கீழ் காங்கிரஸ் அதன் அனைத்து செல்வாக்கையும் மதிப்பையும் இழந்துவிட்டது எனவும் பேசியுள்ளார்.

காங்கிரஸ் ஜடோ:

ராகுல் காந்தியால் திட்டமிடப்பட்ட  பாரத் ஜோடோ யாத்ராவை  குறிப்பிட்ட அவர், ஒன்றுபட்ட இந்தியா பிரச்சாரத்தை விட காங்கிரஸ் ஜோடோ பயிற்சியை அதாவது காங்கிரஸை சரிசெய்ய கட்சி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

ராகுலின் பங்கு:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கடந்த மூன்று வருடங்களாக பல உயர்மட்ட வெளியேற்றங்களுக்கு பிறகு அவரும் அவருடைய பதவியை ராஜினாமா செய்து முழுமையாக் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். 

உள்கட்சித் தேர்தல்கள் போலித்தனம் என்றும், கட்சியில் ராகுல் காந்தியின் பங்கை குறித்தும் விமர்சித்துள்ளார். 

ராகுல் காந்தி அரசியலுக்கு வந்தவுடன், குறிப்பாக ஜனவரி 2013ல் அவர் கட்சியின் துணைத் தலைவராக சோனியா காந்தியால் நியமிக்கப்பட்ட பிறகு, முன்பு இருந்த முழு ஆலோசனை அமைப்பும் ராகுல் காந்தியால் உடைக்கப்பட்டது என்று ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதிர்ச்சித்தன்மையில்லாத குழந்தை ராகுல்:

ராகுல் காந்தி குழந்தை தனமாகவும் முதிர்ச்சியின்மையுடனும் நடந்து கொள்கிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவருடைய முதிர்ச்சியின்மைக்கு மிகவும் வெளிப்படையான எடுத்துக்காட்டுகளில் ஒன்று, அரசால் வெளியிடப்பட்ட அரசாணை ஒன்று ராகுல் காந்தியால் ஊடகங்களின் முன் கிழித்தெறியப்பட்டது. அந்த அவசரச் சட்டம் காங்கிரஸின் மையக் குழுவில் முடிவு செய்யப்பட்டது எனவும் பின்னர் மத்திய அமைச்சரவையால் ஒருமனதாக அங்கீகரிக்கப்படு பின்னர் இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவரால் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டது. இந்த குழந்தைத்தனமான நடத்தை பிரதமர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை முற்றிலுமாகத் தகர்த்தது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கட்சியின் தோல்விக்கு இது போன்ற நடவடிக்கைகளே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்த ஒரு நடவடிக்கை 2014 தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தோல்விக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது எனவும் இது வலதுசாரி சக்திகள் மற்றும் சில நேர்மையற்ற கார்ப்பரேட் நலன்களின் கலவையிலிருந்து அவதூறு மற்றும் தூண்டுதல் பிரச்சாரத்தைக் கொண்டு வந்தது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரிமோண்ட் கண்ட்ரோல் மாடல்:

சோனியா காந்தியின் ஐக்கிய மக்கள் கூட்டணியை ரிமோட் கண்ட்ரோல் மாடல் என்று அழைத்துள்ளார் குலாம் நபி ஆசாத்.

இன்னும் மோசமானது,  ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் ஒருமைப்பாட்டை தகர்த்த 'ரிமோட் கண்ட்ரோல் மாடல்' இப்போது இந்திய தேசிய காங்கிரஸுக்குள்ளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவும் சோனியா காந்தி ஒரு பெயரளவிலான தலைவர் எனவும் கட்சியின் ​​அனைத்து முக்கியமான முடிவுகளையும் ராகுல் காந்தி  அல்லது அவரது காவலர்கள் மற்றும் ராகுலின் தனிப்பட்ட உதவியாளர்கள் எடுக்கின்றனர் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜினாமா செய்த ஆனந்த் சர்மா:

ஜம்மு காஷ்மீரின் காங்கிரஸ் பிரிவுத் தலைவராக அவரை நியமித்த  சில நாட்களுக்குப் பிறகு ஆசாத் ராஜினாமா செய்துள்ளார். அவரது சகாவான மற்றொரு காங்கிரஸ் அதிருப்தியாளரான ஆனந்த் ஷர்மா இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து அவமானங்களை காரணம் காட்டி ராஜினாமா செய்துள்ளார்.

“இமாச்சல பிரதேச தேர்தலுக்கான காங்கிரஸின் வழிநடத்தல் குழுவின் தலைவர் பதவியில் இருந்து நான் கனத்த இதயத்துடன் ராஜினாமா செய்துள்ளேன். நான் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ்காரன் என்ற எனது நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறேன் என்றும் மீண்டும் வலியுறுத்துகிறேன். என் ரத்தத்தில் ஊறிப்போன காங்கிரஸ் சித்தாந்தத்தில் உறுதியாக இருக்கிறேன், இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்! இருப்பினும், தொடர்ச்சியான விலக்கு மற்றும் அவமதிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஒரு சுயமரியாதை நபராக - எனக்கு வேறு வழியில்லை, ”என்று சர்மா தனது ட்வீட்டரில் எழுதியுள்ளார்.

சோனியாவுக்கு எழுதிய கடிதம்:

2019 பொதுத் தேர்தலில் கட்சியின் தோல்விக்குப் பிறகு சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 காங்கிரஸ் அரசியல்வாதிகளில் ஆசாத் மற்றும் ஷர்மா ஒரு பகுதியாக இருந்தனர், உள்கட்சி ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்காக அதன் நிறுவன அமைப்புகளில் பெரும் மாற்றங்களைக் கோரியிருந்தனர்.  அவர்களின் பல கோரிக்கைகளில் முழுநேர காங்கிரஸ் தலைவரை நியமிப்பது மற்றும் கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கான நியமனங்களில் அதிக வெளிப்படைத்தன்மை போன்றவை அடங்கும்.

தொடர்ச்சியான தோல்விகள்:

கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் கட்சி படுதோல்வியைச் சந்தித்து வந்தாலும், அதிருப்தியாளர்களின் இரு கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

2019 தோல்விக்குப் பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத் மற்றும் சமாஜ்வாதி கட்சியிலிருந்து ராஜ்யசபா எம்.பி.யான கபில் சிபல் ஆகியோரை இழந்துள்ள நிலையில் தற்போது குலாம்நபி ஆசாத்தின் பதவி விலகலும் கட்சியில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  ஒரே நாடு!!ஒரே பிராண்ட்!!