'கவாச்' சிஸ்டம் என்றால் என்ன? 

'கவாச்' சிஸ்டம் என்றால் என்ன? 

Published on

ஒடிசாவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த இரயில் விபத்து 280க்கும் மேற்பட்ட நபர்களின் உயிரை பலி வாங்கியுள்ளது. இந்நிலையில் கவாச் எனும் சிஸ்டம் இருந்திருந்தால் இதனை தடுத்திருக்கலாம் என சிலர் கூறி வருகின்றனர்.  கவாச் சிஸ்டம் என்றால் என்ன? அது எப்படி செயல்படும் ? என்பதை பற்றி இந்த செய்தியில் சிறு குறிப்புகளாக பார்ப்போம்.

* கவாச் (Kavach) என்பது இந்திய ரயில்வேயின் தானியங்கி ரயில் பாதுகாப்பு கருவியாகும்.

* இது முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். 

* இந்த தொழில்நுட்பத்தை ரயில்வேயின் வடிவமைப்பு ஆராய்ச்சி அமைப்பான ஆர்டிஎஸ்ஓ உருவாக்கியுள்ளது.

* ஓடும் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே தனது சொந்த தானியங்கி ரயில் பாதுகாப்பு சாதனம் ஒன்றை உருவாக்கி அதற்கு "கவாச்" என்று பெயரிட்டுள்ளது.

* கவாச் என்ற ஹிந்தி மொழி வாசத்திற்கு தமிழில் ‘கவசம்’ என்று பொருள்.

* கவாச் ஆபத்தில் சிக்னல் கடந்து செல்வதையும், அதிக வேகத்தில் செல்வதையும் தவிர்க்க லோகோ பைலட்டுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அடர்ந்த மூடுபனி போன்ற மோசமான வானிலையின் போது ரயிலை இயக்கவும் உதவும்.

* கவாச் ரயில் நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தும்.

* இரண்டு ரயில்கள் எதிரெதிர் திசையில் வரும் போது ரயில் எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள கவாச் விபத்து தடுப்பு கருவி தாமாக செயல்பட்டு 380 மீட்டருக்கு முன்பாகவே இரண்டு எஞ்சின்களையும் நிறுத்திவிடும்.

* லோகோ பைலட் பிரேக்கைப் பயன்படுத்தத் தவறினால், தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்தும்.

* அதிக வேகம் மற்றும் பனிமூட்டமான வானிலைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வண்டியில் லைன் சைட் சிக்னலை மீண்டும் செய்கிறது.

* இயக்க அதிகாரத்தின் தொடர்ச்சியான புதுப்பிப்பு கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.

* லெவல்-கிராசிங் கேட்களில் ஆட்டோ விசில் அடிக்கும்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com