மதுரை: அழுகிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் உடல்..தந்தையை கைது செய்த போலீசார்..!.!

மதுரை: அழுகிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் உடல்..தந்தையை கைது செய்த போலீசார்..!.!

மதுரையில் நடந்த கொடூரம்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் காளிமுத்து என்பவர் தனது மனைவி பிரியதர்ஷினி மற்றும்  மகள் தன்ஷிகாவுடன் வசித்து வந்தார். கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி இவர்களது வீட்டில் இருந்து  துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

வாலிக்குள் அழுகிய நிலையில் மகள்

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அதையடுத்து கை, கால்கள் கட்டப்பட்டு வாளிக்குள் அழுகிய நிலையில் கிடந்த சிறுமி தன்ஷிகாவின் உடலைப் போலீசார் கைப்பற்றினர். இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 

மேலும் அறிய: சிலிண்டர் குடோன் வெடித்த விபத்தில்...அடுத்தடுத்து உயிர்பலியாகும் அவலம்

தலைமறைவான தந்தை

தனது மகளைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான காளிமுத்துவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து தேடுதலில் ஈடுப்பட்டு வந்த போலீசார், இன்று அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

மனைவியின் நடத்தையில் சந்தேகம்

மனைவி பிரியதர்ஷினியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தனது ஒரே மகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், பயத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடியாமல், மதுரையில் அவர் சுற்றி திறிந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.