“கழிவறைக் கட்டினா தான் வருவேன்”- மனைவி... கோபத்தில் வெட்டித் தள்ளிய கணவன்...

கழிவறை கட்டினால் தான் வீட்டிற்கு வருவேன் என அடம்பிடித்த மனைவியை கோபத்தில் வெட்டித் தள்ளிய கணவரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“கழிவறைக் கட்டினா தான் வருவேன்”- மனைவி... கோபத்தில் வெட்டித் தள்ளிய கணவன்...

அரியலூர் : ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் ஜாஃபர். மாட்டுக்கறி வெட்டும் தொழிலாளியான இவர், மும்பையைச் சேர்ந்த ரியாஸ் என்பவரை 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 25 வயதில் ஒரு மகனும், 22 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

திருமணமாகி பல ஆண்டுகள் ஆன பிறகும், சமீப காலங்களாக மனைவி நடத்தை மீது சந்தேகம் கொண்டிருக்கிறார் அவர். முதலில் இது ரியாஸுக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் போகப் போக, ஜாஃபரின் போக்கால் ரியாஸுக்கு வெறுப்பு உருவாகி இருக்கிறது.

மேலும் படிக்க | மாணவி தூக்கிட்டு தற்கொலை... நடவடிக்கை எடுக்கக்கோரும் பெற்றோர்...

இதில் மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், கழிவறை கூட இல்லாத நிலையில், தனது தேவைகளுக்காக, விடியல் காலையிலும் வெட்ட வெளியில் போக வேண்டிய நிலையில் அப்போது கூட வேவு பார்க்கும் ஒரு கணவராக தான் ஜாஃபர் இருந்திருக்கிறார்.

தினமும் நிம்மதியாக இயற்கை உபாதை கூட செல்ல முடியாமல் பின் தொடரும் கணவர் மேல் கோபமடைந்த ரியாஸ், தனக்கென்று ஒரு கழிவறை மற்றும் குளியலறை கட்ட சொல்லி தனது கணவரிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

மேலும் படிக்க | முதலமைச்சர் மருமகன் தெரியுமா?- சுமார் 77 லட்சம் மோசடி செய்த அவலம்...

பல முறை அவரை தனது வீட்டிற்கு மீண்டும் அழைத்தும், ரியாஸ் வர மறுத்திருக்கிறார். மேலும், வீட்டில் தனக்கு கழிவறை கட்டினால் மட்டுமே திரும்பி வருவதாக விரட்டி அடித்து, உடையார்பாளையத்தில் உள்ள பெருமாள் கோவில் அருகே தனியே வீடு எடுத்து தங்கியவர்  6 மாதங்களாக திரும்பி வரவே இல்லை. 

ஆத்திரம் அடைந்த கணவர் ஜாஃபர், நேற்றிரவு மது அருந்தி, முழு போதையில் மனைவி ரியாசை தேடி சென்றார். மறுபடியும் தன்னுடன் வீட்டிற்கு வர கேட்ட போது, ரியாசும் மறுத்திருக்கிறார். விடாமல் கெஞ்சி, காலில் விழுந்து கேட்ட போதும் ரியாஸ் வர மறுத்ததால் ஜாஃபர் கடும் கோபமடைந்தார்.

மேலும் படிக்க | திருமணத்தில் ரசகுல்லாவிற்கு ஏற்பட்ட சண்டையில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு..!

ஆத்திரம் தாங்க முடியாமல் ஜாஃபர் ரியாஸை சரமாரியாக அடித்து, கொடூரமாக கொலை செய்திருக்கிறார் ஜாஃபர். ரத்தம் சொட்ட அங்கேயே துடிக்க துடிக்க உயிரிழந்தார் ரியாஸ். கோபத்தில் கொன்றாலும், மனைவி மீது காதலாக இருந்த ஜாஃபர், மனைவியின் இறந்த உடல் அருகிலேயே படுத்து அழுதிருக்கிறார் ரியாஸ்.

சந்தேகம் மிகுதியானதால், மனைவியின் அடிப்படை தேவைகளுக்கு கூட வழியில்லாமல் தவிடக்க விட்டதோடு, கொடூரமாக கொலையும் செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்