வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்

வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்
Published on
Updated on
1 min read

அரக்கோணம் அருகே வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

அரக்கோணம் அடுத்த  மகேந்திரவாடி- அன்வர்திகான்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று மாலை மைசூருலிருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரயில் அதிவேகமாக வந்தது. அப்போது  ரயிலின் C6 பெட்டியின் 75-76 வது இருக்கை அருகே உள்ள ஜன்னல் கண்ணாடி மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்கள். இதில்  கண்ணாடி சேதமடைந்தது. அதிர்ஷ்ட்ட வசமாக பயணிகள் யாருக்கும் எவ்வித காயமின்றி தப்பினர்.

ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடைந்ததும் தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் C6 பெட்டியை பார்வையிட்டனர். 

ரயில்வே அதிகாரிகளால் சென்னை சென்ட்ரலில் அளிக்கப்பட்ட புகார் காட்பாடி ரயில்வே போலீஸார் மற்றும் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு அனுப்பப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காட்பாடி ரயில்வே போலீசார் மற்றும்  அரக்கோணம்  ரயில்வே பாதுகாப்பு படையினர் நள்ளிரவு முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com