கைது செய்யப்பட்டார் கொடூரக்காரி!!! வைரலான வீடியோவால் வந்த விடியல்!!!

முன்னாள் பாஜக தலைவரான சீம பத்ரா, சமீபத்திய சர்ச்சைகளைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டார் கொடூரக்காரி!!!  வைரலான வீடியோவால் வந்த விடியல்!!!

தனது வீட்டில் பணிப்பெணாக நுழைந்த 19 வயது பழங்குடியின பெண்ணை, அடித்து உதைத்து கொடுமை படுத்து, அவரது வாழ்க்கையை சீரழித்த முன்னாள் பாஜக தலைவர், கட்சியில் இருந்து நிக்கப்பட்டதை அடுத்து, தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

கும்லாவில் இருந்து சுனிதா என்ற பழங்குடியின பெண்ணை, தனது வீட்டில் அடைத்து வைத்து, பயங்கரமாக துன்புறுத்தியுள்ளார் சீமா பத்ரா. தானே ஒரு பெண்ணக இருக்க, மற்றொரு பெண்ணை எப்படியெல்லாம் நினைக்க முடியாத அளவிற்கு கொடுமை படுத்த முடியுமோ, அத்தனை கொடுமைகளையும் செய்திருக்கிறார் அவர்.

மேலும் படிக்க | சிறுநீரைக் குடிக்க வைத்த பாஜக தலைவர் செய்த அசிங்கம் அம்பலமானது!!!

சிறுநீரைக் குடிக்க வைத்த பாஜக தலைவர் செய்த அசிங்கம் அம்பலமானது!!!

ஜார்கண்ட் மாநிலத்தின் பாஜக தலைவராக இருந்த சீமா பத்ரா, ஓய்வு பெற்ற மகேஷ்வர் பத்ரா என்பவரது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், அவர் தனது பணிப்பெண்ணை கொடுமை படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி படு வைராலனதை அடுத்து, அவருக்கு எதிராக பல கருத்துகள் வெளியானதித் தொடர்ந்து, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கின் எஃப்ஐஆர் படி, புகார்தாரர் விவேக் ஆனந்த் பாஸ்கி, ஒரு அரசு ஊழியர், பத்ராவின் மகன் ஆயுஷ்மானிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றார், இது வீட்டில் வீட்டு உதவியாளருக்கு எதிராக நடக்கும் உடல்ரீதியான வன்முறையை விவரிக்கிறது. ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் செவ்வாய்க்கிழமை டிஜிபியிடம் இந்த சம்பவம் குறித்து இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார், அதே நேரத்தில் காவல்துறையின் "செயலற்ற தன்மைக்கு" கண்டனம் தெரிவித்தார்.