9 ஆண்டுகளுக்கு முன் மனைவியை கொன்ற கணவன்...! எலும்புகளை ஏரியில் வீசிய சம்பவம்...!

9 ஆண்டுகளுக்கு முன் மனைவியை கொன்ற கணவன்...! எலும்புகளை ஏரியில் வீசிய சம்பவம்...!

புதுச்சேரியில் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு பாஸ்கர் என்பவர் தனது மனைவி எழிலரசியை கழுத்தை நெறித்து கொலை செய்து ஏரிகரையில் புதைத்த விவகாரத்தில் நேற்று 4 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இன்று எழிலரிசியின் எலும்புகளை தேடும் பணியில் போலீசார் ஈடுப்பட்டனர்.

புதுச்சேரி அனிதா நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரபல தாதா கருனா. ஆயுள் தண்டனை கைதியான இவர் சிறையில் உள்ளார், இவரது தம்பி பாஸ்கர். இவரும் ஒரு கொலை வழக்கில் கடந்த 2009 ஆம் ஆண்டு கைதாகி தண்டனை பெற்று வந்த நிலையில் கடந்த 2016 ஆண்டு நன்னடதையின் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். பாஸ்கரின் மனைவி எழிலரசி இவர் கடந்த 9 ஆண்டுகளாக மாயமாகி இருந்துள்ளார். இது தொடர்பாக அவரது உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இது குறித்து அவர்கள் முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் சந்தோஷ் தலைமையிலான போலீசார், எழிலரசியின் கணவர் பாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்ட போது கடந்த 2013 ஆம் ஆண்டு,அவர் பரோலில் வெளியே வந்த போது தனது மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தனது நண்பர்களான பிரகாஷ், கருப்பு சரவணன், பாம் வேலு ஆகியோர் உடன் சேர்ந்து தனது மனைவியை காரில் ஏற்றி கொண்டு காரிலயே கழுத்தை நெறித்து கொலை செய்து, தான் முன்பே வேல்ராம்பட்டு ஏரிகரை அருகே தோண்டி வைத்திருந்த குழியில் புதைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களாக புறவழி சாலை பணிகள் நடந்து கொண்டிருந்ததால் இதில் பீதி அடைந்த பாஸ்கர், எழிலரசியை புதைத்த இடத்திற்கு சென்று அவரது எலும்பு கூடுகலை ஏரிகரையில் தூக்கி எறிந்துள்ளது தெரியவந்தது,

இதனை தொடர்ந்து எலும்புகள் மற்றும் அவரின் உடமைகள் வீசி எறியப்பட்ட ஏரி கரை பகுதியில் தெற்கு காவல் கண்காணிப்பாளர் ரவிகுமார், முதலியார்பேட்டை ஆய்வாளர் இனியன் தலைமையிலான போலீசார் நீர்முழ்கி வீரர்கள் உதவியுடன் ஏரியில் எழிலரசியின் எலும்புகள் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது, ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தேடியும் 2 செல்போன்கள் மட்டும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அந்த போன் யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் எலும்புகள் தேடும் பணி தொடர்வதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : சிம்-பாக்ஸ்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக மோசடி...! இருவர் கைது...!