சிகரம் தொடு படப்பாணி திருடன்.....!!!!

சிகரம் தொடு படப்பாணி திருடன்.....!!!!

கொச்சியில் ஏடிஎம்களில் பணம் திருடியதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குற்றம் சாட்டப்பட்டவர் முபாரக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் சவுத் இந்தியன் வங்கியின் பல்வேறு ஏடிஎம் கிளைகளில் ஃபைபர் கருவியைப் பயன்படுத்தி திருடியுள்ளார்.  இதுவரை சுமார் 140 ஏடிஎம் பரிவர்த்தனைகளில் பணத்தை திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் நேற்று மட்டும் ஏழு பரிவர்த்தனைகள் மூலம் 25000 ரூபாயை திருடியதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொச்சி நகர காவல்துறை துணை ஆணையர் எஸ்.சசிதரன் செய்தியாளர்களிடம்  பேசுகையில், “களமச்சேரி சவுத் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் சிலர் பணம் எடுக்க சென்ற போது பணம் எடுக்க முடியவில்லை என்ற புகார் எழுந்தது.  “கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கி நிர்வாகத்திடம் இதைக்குறித்து புகார் செய்துள்ளனர்.  வங்கி ஏடிஎம்களில் பணம் வரவில்லை என்றும் ஆனால் அக்கவுண்டில் பணம் குறைந்துள்ளது எனவும் புகார் எழுந்துள்ளது.

வாடிக்கையாளர் பணத்தை எடுக்க முயன்றபோது அது வெளிவராததால் வெளியேறியுள்ளனர்.  அவர்கள் வெளியேறியதும் முபாரக் உள்ளே சென்று பணத்தை எடுத்தது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது என்று சசிதரன் கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஃபைபர் கருவியை பயன்படுத்தி இதைச் செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

உத்தரபிரதேசத்திலும் இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 18ம் தேதி முதல் கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடித்து வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்தும் மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் சசிதரன் கூறியுள்ளார்.  மேலும் அவர் தொடர்ந்து ஏன் சவுத் இந்தியன் வங்கியயையே குறிவைத்து கொள்ளையடித்துள்ளார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதையும் படிக்க: ”சொல் ஒன்று; செயல் வேறு” தலைமை நீதிபதியாக ரமணா சாதித்தது என்ன!!!