மிரட்டல் விடுத்த நிதி நிறுவனம்! விபரீத முடிவெடுத்த விவசாயி!

மிரட்டல் விடுத்த நிதி நிறுவனம்! விபரீத முடிவெடுத்த விவசாயி!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிதிநிறுவன கடன் மூலம் வாங்கிய நெல் அறுவடை இயந்திரத்திம் வாங்கிய விவசாயியை  தொடர்ந்து மிரட்டியதால் அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம், வானம்பாடி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பெருமாள்(35). இவர் கடந்த ஆண்டு தனியார் நிதி நிறுவனமாக ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின் மூலம் 27 லட்சம் மதிப்புள்ள நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தை வாங்கியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட்தால் தவணை தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெருமாளின் வீட்டிற்கு நேரில் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், அவரை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், அந்த ஊழியர்களுக்கு முன்பு நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில் வைத்திருந்த டீசலை தன் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com