ஆவணம் இல்லாமல் சிக்கிய இளைஞர்... ஒதுக்குபுறமாக அழைத்து, கொடூரமாக தாக்கிய காவலர்கள்!!

வாகன பரிசோதனையின் போது ஆவணங்கள் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர், போக்குவரத்துக் காவல் துறையினர் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக வந்து செல்லும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி, பரிசோதனை செய்துள்ளனர். அப்பொழுது, அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில், மணிகண்டன் என்ற இளைஞர் சென்றுள்ளார்.

அச்சமயம், அங்கு வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள், மணிகண்டனை அவரிடம் ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால், மணிகண்டனிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. அவரிடம் ஆவணங்கள் இல்லாதது குறிக்கு கேள்வி எழுப்பியதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், காவலர்களுக்கு ஆத்திரம் தலைக்கேறியுள்ளது. 

அப்பொழுது, மணிகண்டனை அருகில் உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் ரவி மற்றும் பொண்பாண்டியன் தாறுமாறாக தாக்கியுள்ளனர். இதனால், காயமடைந்த மணிகண்டன், அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். 

சம்பவத்தை அறிந்து வந்து நீதி கேட்ட அவரது உறவினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பின்னர், உறவினர்கள் அனைவரும், அங்கிருந்து களைந்து சென்றுள்ளனர்.

காயமடைந்த இளைஞரை, காவலர்களே அருகிலுள்ள அரசு சேர்த்துள்ளனர். ஆவணங்கள் இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்காமல், ஒதுக்குபுறமாய் அழைத்துச் சென்று கடுமையாக தாக்குவதற்கு, யார் உரிமை கொடுத்தது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com