சில்லி சிக்கன் தர மறுத்ததால், கடை ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்!

சில்லி சிக்கன் தர மறுத்ததால், கடை ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்!

சேலம்: சில்லி சிக்கன் தர மறுத்ததால் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய நபர்.

சேலம் கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் அதே பகுதியில், சில்லி சிக்கன் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு கருங்கல்பட்டி முனியப்பன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த முரளிதரன் என்பவர், சதிஷ் பணிபுரியும் கடைக்குச் சென்றுள்ளார். 

அங்கு, குடிபோதையில் இருந்த முரளிதரன், சதீஷிடம் சில்லி சிக்கன் கேட்டு தகராறு செய்துள்ளார். அவருக்கு, சில்லி சிக்கன் தர மறுத்த சதீஷை, முரளிதரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.  

இதில்  சதீஷிற்கு கழுத்து, தோள்பட்டை, வயிறு, ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவமறிந்த செவ்வாய்பேட்டை காவல்துறையினர், முரளிதரன் மேல் வாழக்கு பதிவு செய்து, முரளிதரனை தேடி வருகின்றனர்.

சில்லி சிக்கனுக்காக ஒருவரை கத்தியால் தாக்கியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: விசாரணைக்கு வந்தால், தாக்கும் காவல் உதவி ஆய்வாளர்!