சாலையில் நின்றிருந்தவரை தாக்கிய நபர்...! வெளியான சிசிடிவி...!

சாலையில் நின்றிருந்தவரை தாக்கிய நபர்...! வெளியான சிசிடிவி...!

சென்னையில் நடுரோட்டில் நின்றிருந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவர் டைல்ஸ் போடும் வேலை செய்து வருகிறார். நேற்றிரவு ரமேஷ் மதுபோதையில் பெரியார் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ரமேஷிடம், ஒருமையில் பேசி, தான் யார் தெரியுமா எனக்கூறி திடீரென ரமேஷை தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார், இருந்தாலும் விடாத அந்த நபர் மீண்டும் ரமேஷை எட்டி உதைத்து கொடூரமாக தாக்கி மிரட்டி உள்ளார். 

இதில் காயமடைந்த ரமேஷை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரமேஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, ரமேஷை தாக்கிய நபர் ஜெயசந்திரன் என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள ஜெயசந்திரனை போலீசார் தேடி வருகின்றனர். ரமேஷை கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com