கண்மாய், குடிநீர் குழாயை பயன்படுத்தத் தடை; ஒரு தலைப்பட்ச தீர்ப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு... சுதந்திர இந்தியாவில் இருளில் மூழ்கிய குடும்பம்..!

கண்மாய், குடிநீர் குழாயை பயன்படுத்தத் தடை; ஒரு தலைப்பட்ச தீர்ப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு... சுதந்திர இந்தியாவில் இருளில் மூழ்கிய குடும்பம்..!

கண்மாய், குடிநீர் குழாயை பயன்படுத்த தடை; ஒரு தலைப்பட்ச தீர்ப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பாதிப்பு... சுதந்திர இந்தியாவில் இருளில் மூழ்கிய குடும்பம்..!


சுதந்திர இந்தியாவில் நிகழும் கொடுமை

ஒரே குடும்பத்தை சேர்ந்த பன்னிரெண்டு பேரை கடந்த எட்டு ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராம மக்கள். பொது குடிநீர் குழாயில் இருந்தும், கண்மாயில் இருந்தும் தண்ணீரை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது. சுதந்திர இந்தியாவில் நடந்தேறிய இச்சம்பவம் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தலைப்பட்சமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்த சிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கழநீர்மங்கலம் கிராமத்தில் விவசாய கூலித் தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கண்மாயிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவதில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் உச்சமாக சக்திவேல் என்பவரின் குடும்பத்திற்கு எதிராக கிராம கூட்டத்தில் ஒரு தலைப்பட்சமாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதுடன், சக்திவேல் குடும்பத்தை சேர்ந்த 12 பேரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும், கிராம பொது கண்மாயில் இவர்கள் குளிக்கவும், குடிநீர் குழாயை பயன்படுத்தவும் தடையும் விதித்துள்ளனர்.

மேலும் அறிய: சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் தொந்தரவு..! பாஜக பிரமுகர் மீது புகார்

தொடரும் கொடூர சம்பவங்கள் 

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சக்திவேலுக்கு சொந்தமான கோழிகளுக்கு விஷம் வைத்து கொல்லும் கொடூரமும் அரங்கேறி உள்ளது. மேலும், அவர் வளர்த்து வரும் ஆடுகளின் கால்களை உடைத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சக்திவேல் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.


வாழ்வில் வசந்தம் பிறக்காதா? ஏங்கும் குடும்பம்

தங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதிக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி வர்கீஸிடம், சக்திவேல் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களின் கண்ணீர் கதையை கேட்ட ஆட்சியர், கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் பிறக்காதா? என குடும்பத்தினர் ஏங்கி வருகின்றனர்.