
புழல் காவல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலத்திற்கு புழல் காந்தி தெருவில் குட்கா பதுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் அங்கு தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஒருவர் இருசக்கர வாகனத்தில் குட்கா பண்டல்களை ஏற்றிக்கொண்டு வெளியே செல்ல இருந்த போது உடனே அவரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அவர் நிர்மல் குமார் (வயது 45) என்பது தெரியவந்தது.
மேலும் போலீசாரின் விசாரணையில் காந்தி தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருவதாகவும் அங்கு வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் குட்கா பான்மசாலா ஹான்ஸ் பாக்கெட்டுகளை வீட்டில் பதுக்கி வைத்து அதனை சுற்றியுள்ள கடைகளில் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. பின்னர் தனிப்படை போலீசார் இவரது வீட்டில் சென்று பார்த்ததில் அங்கு 15 கிலோ பான்பராக் மற்றும் குட்கா ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் ஷோபா தேவி நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.