வெறிச்சோடி காணப்படும் போடி மெட்டு சாலை...

இடுக்கி மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் பந்த் காரணமாக வாகனங்கள் எதுவும் செல்லாததால் போடி மெட்டு சாலை வெறிச்சோடியது 

வெறிச்சோடி காணப்படும் போடி மெட்டு சாலை...

தேனி | கேரளா இடுக்கி மாவட்டத்தில் பூப்பாறை   சூரிய நல்லி பகுதியில் சுற்றித் திரியும் அரிசி கொம்பன் யானையை பிடிப்பதற்கு கேரளா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னக்காணல், சாந்தம்பாறை, மூணாறு, தேவிகுளம், மறையூர் காந்தளூர் போன்ற ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் போடியில் இருந்து மூணாறு செல்லும் வாகனங்கள் முந்தல் சோதனை சாவடி மற்றும் போடி மெட்டு சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றது. காய்கறி பால் பெட்ரோல் ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சிகளில் நடைபெறும் பந்த் காரணமாக கேரளாவில் உள்ள ஏலத்தோட்டம் மற்றும் தேயிலை தோட்டத்திற்கு செல்லும் வேலையாட்கள் இன்று பணிக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம்... 19 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்பு...