குடும்பத்தினருடன் பட்டினிப் போராட்டம் செய்த தொழிற்சாலை ஊழியர்கள்...

ஊதிய உயர்வுக்கு தொழிற்சாலை நிர்வாகம் அழைக்காததால் இந்த பட்டினிப் போராட்டத்தில் தொழிற்சாலை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குடும்பத்தினருடன் பட்டினிப் போராட்டம் செய்த தொழிற்சாலை ஊழியர்கள்...

காஞ்சிபுரம் | ஓரகடம் பகுதியில் தனியார் கார் உதிரி பாகங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இதன் ஊழியர்களை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என கூறி காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவலாங்கேட் என்ற பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் இன்றி குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விரைந்து தொழிற்சாலை நிர்வாகம் ஊதிய உயர்வுக்கு பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.

CITU மாவட்ட நிர்வாகிகளுடன் இணைத்து மொத்தம் 250க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் அமல்படுத்த போராட்டம்!!!