
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம் பொம்மி தெரு பகுதியைச் சேர்ந்த திமுக நகர செயலாளரும், நகைக்கடை அதிபருமான அருண் லாலின் மனைவி தேவிப்பிரியா 13-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர், ஒரு மகள் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகள் மோனிஷா ராசிபுரம் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டில் அருண் லாலும்,தேவி பிரியாவும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதேபோல் இவர்களது 18 வயது மகள் மோனிஷாவும் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் 3 பேர் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.