பவானிசாகர் அணை வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள்... அதிகாரிகள் ஆய்வு...

பவானிசாகர் அணை வாய்க்காலில் செத்து மிதந்த மீன்களை மீன்வளத் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பவானிசாகர் அணை வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள்... அதிகாரிகள் ஆய்வு...
Published on
Updated on
1 min read

ஈரோடு | சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் கீழ்பவானி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து  பவானி ஆறு மற்றும் கீழ் பவானி வாய்க்கால் செல்கிறது. இந்த அணையில் இருந்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறந்து விடப்படும்.

இந்த நிலையில் பவானிசாகர் கீழ் பவானி அணை நீரேற்று நிலையம் அருகே இன்று காலை நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசியது. இச்சம்பவம் குறித்து பவானிசாகர் அணை மீன்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இத்தகவலை அடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீன்கள் இறப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானிசாகர் கீழ்பவானி அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீரில்  வெள்ளை நிறத்தில், ரசாயனம் கலந்த வண்ணத்தில், தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த  ரசாயனம் கலந்த தண்ணீர் மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் இருந்து, பவானிசாகர் அணைக்கு வரும் ஆற்றில், அப்பகுதியில் உள்ள ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் மீன் இறப்புக்கு காரணமாக இருக்குமா என அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com