ஆணுடன் பைக்கில் சென்ற மனைவியை தள்ளி விட்ட கணவன்... மனைவி பலி...

ஆண் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற மனைவியை தள்ளி விட்டு கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆணுடன் பைக்கில் சென்ற மனைவியை தள்ளி விட்ட கணவன்... மனைவி பலி...

காஞ்சிபுரம் | திருவண்ணாமலையைக் சேர்ந்த  30 வயதான கொத்தனார் சிவா, 26 வயதான சித்தாள் பூமாதேவியை 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். படைப்பை அருகே மணிமங்கலம் காந்தி நகரில் தங்கியிருக்கும் இவர்களுக்கு 8 வயதில் லோகேஸ்வரி என்ற மகளும் 6 வயதில் சதீஷ் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் படப்பை அடுத்த ஒரத்தூரை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் பணி செய்யும் சுந்தர் என்பவருடன் பூமாதேவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இருவருக்குள் அடிக் அடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கடந்த மூன்று மாதமாக தனித் தனியே பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

மேலும் படிக்க | போராட்டத்தில் இறங்கிய தற்காலிக துப்புரவு பணியாளர்கள்...

அப்படியிருக்க, பூமாதேவி தனது ஆண் நண்பர் சுந்தரின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்த வாறு படப்பை அருகே சென்றுள்ளார். இதனை கண்ட பூமாதேவியின் கணவர் சிவா பின்தொடர்ந்து சென்று இருசக்கர வாகனத்தை கீழே தள்ளியுள்ளார்.

நிலைத்தடுமாறி கீழே விழுந்த பூமாதேவி பின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியுள்ளது. இதனை கண்ட சுந்தர் அங்கிருந்து தப்பியோடினார்.

மேலும் படிக்க | அமுதசுரபி ஊழியர்கள்: 30 மாதம் நிலுவை ஊதியத்தை தர வலியுறுத்தி மாடியில் ஏறி நின்று போராட்டம்

ரத்த வெள்ளத்தில் இருந்த மனைவியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்ட சிவா அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சிவாவை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர். பிடிக்காத மனைவி விட்டு சென்ற பிறகும் அவரை இப்படி கொலை செய்த கணவரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி கொள்ளை...