தலைக்கவசம் அணிந்திருந்தும் மண்டை உடைந்து உயிரிழப்பு...!

தலைக்கவசம் அணிந்திருந்தும் மண்டை உடைந்து உயிரிழப்பு...!

திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியைச் சேர்ந்த குப்பன் மகன் ராஜேந்திரன். இவரது வயது 55.  இவர் மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார்.  இந்த நிலையில் மிட்டூர் பகுதியில் வேலைக்குச் சென்று  மீண்டும் வீடு திரும்பும் போது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டு பகுதியைச் சேர்ந்த திருமலை (40) என்பவர் பொலிரோ வாகனத்தில் மருந்து கடைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை எடுத்து வந்துள்ளார்.

இராஜாவூர்  பகுதியில் இரண்டு  வாகனம் நேர் எதிரே மோதிக்கொண்டதில் ராஜேந்திரன் மண்டை உடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.  இதன் காரணமாக அக்கம்பக்கத்தினர் ராஜேந்திரன் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பொலிரோ பிக் அப் வேன் ஓட்டுனர் திருமலை விபத்து ஏற்படுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.  மேலும் சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் ராஜேந்திரன் இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது தலைக்கவசம் அணிந்து வந்ததும் அதனையும் மீறி மண்டை உடைந்து உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:   திடீரென உள்வாங்கிய விவசாய நிலம்.... ஆராய்ச்சியில் மூத்த புவியியலாளர்கள்!!