மின் உற்பத்தி பாதிப்பு...! சரி செய்ய ஒரு மாதகாலமாகும் என அறிவிப்பு ...!

மின் உற்பத்தி பாதிப்பு...!  சரி செய்ய ஒரு மாதகாலமாகும் என அறிவிப்பு ...!

சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 210 மெகாவாட் வீதம் நான்கு அலகுகளை கொண்ட 840 மெகாவாட் அனல் மின்நிலையமும், 600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய மற்றொரு அனல் மின்நிலையமும் செயல்பட்டு வருகிறது. 

இந்த இரண்டு அனல் மின் நிலையங்களிலும் நாள் ஒன்றுக்கு 1,440 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 840 மெகாவாட் அனல் மின்நிலையத்தில் இயங்கி வரும் நான்காவது அலகில், டர்பைனில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. டர்பைனில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை சரிசெய்ய ஒருமாத காலம் ஆகும் என அனல்மின்நிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : விஜய் குரலில் " ரஞ்சிதமே " பாடல்...! இணையத்தை கலக்கி வரும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்...!