சிதம்பரம் : குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு..! தொடங்கி வைத்த அமைச்சர்கள்...!

சிதம்பரம் : குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு..! தொடங்கி வைத்த அமைச்சர்கள்...!
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அரசு கடலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர் மன்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர்  குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு மையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிதம்பரம் தொகுதி எம்பி திருமாவளவன் பங்கேற்றனர்.

ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சுகாதார ஆய்வுக்கூடம், 10 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மையம் அமைவதற்கான இடங்களையும் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஒரு கோடியே 83 லட்சம் செலவில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளை மருத்துவமனைக்கு வழங்கி, பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு மையத்தினையும் துவக்கி வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com