3 கடைகளில் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை...

கோபிசெட்டிப் பாளையத்தில் அடுத்தடுத்த 3 கடைகளில் ஓடுகளை பிரித்து இறங்கிய கொள்ளையர்கள் ஒரு லட்சம் ரூபாயை திருடியுள்ளனர்.
3 கடைகளில் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை...
Published on
Updated on
1 min read

ஈரோடு | கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சுரை சேர்ந்தவர் பூபதி. இவர் கோபி திருப்பூர் சாலையில் துணி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இன்று காலை கடைக்கு வந்த போது கடையின் மேலே இருந்த ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கிய கொள்ளையார் கடையில் வைத்து இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

அதே போன்று அருகே உள்ள உணவகம் ஒன்றிலும் மளிகை கடையிலும் இதே போன்று ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கிய கொள்ளையர் மூன்று கடைகளில் இருந்தும் சுமார் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோபி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபியில் விடிய விடிய போக்குவரத்து உள்ள  பிரதான சாலையான கோபி - திருப்பூர் சாலையில் ஒரே இரவில் அடுத்தடுத்து 3 கடைகளில் ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com