மழை... பூஜை விடுமுறைகளால் போக்குவரத்து நெரிசல்...

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால், பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மழை... பூஜை விடுமுறைகளால் போக்குவரத்து நெரிசல்...

அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் காந்தி ஜெயந்தி, தசரா, ஆயுத பூஜை, மிலாடி நபி என தொடர் விடுமுறை நாட்கள் வந்தன.

இதனால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகளையும் அரசு போக்குவரத்து கழகம் இயக்கியது. ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

மேலும் படிக்க | முகத்துல டீ ஊத்திடுவேன்...- உதவி ஆய்வாளரின் வைரல் வீடியோ....

இந்த நிலையில், விடுமுறை முடிந்து சென்னைக்கு மக்கள் திரும்பத்தொடங்கியுள்ளனர். இதனால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். 

மேலும் படிக்க | மதுபானக் கடைக்கு எதிராக மக்கள் போராட்டம்!