பவித்ரோக்ஷமத்தை முன்னிட்டு பாலசுப்ரமணியர் கோவிலில் லட்சதீபம்...

பவித்ரோக்ஷமத்தை முன்னிட்டு உத்திரமேரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் லட்சதீபம் நடைபெற்றது.

பவித்ரோக்ஷமத்தை முன்னிட்டு பாலசுப்ரமணியர் கோவிலில் லட்சதீபம்...

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது, 1,200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயதில் சுயம்பு வடிவான முருகர் ஜடாமுடியுடன் காட்சி தருகிறார்.

பொதுவாக அனைத்து முருகர் கோவில்களிலும் மயில்வாகனத்தில் காட்சிதரும் முருகர் இந்த ஆலயத்தில் யானை வாகனத்தில் காட்சி தருகிறார், சூரனை வதம் செய்த முருகராக காட்சி தருகிறார்.

மேலும் படிக்க | மாற்றுத்திறனாளியை நீண்ட நேரம் காக்க வைத்த வைரல் வீடியோ...

இந்த ஆலயத்தில் பவித்ரோஷ்மம் கடந்த 200 ஆண்டுகளாக, ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது, கடந்த 10 நாட்களாக நடைபெற்ற விழாவில் நிறைவு பௌர்ணமி நாளான இன்று லட்சதீபம் நடைபெற்றது.

இதில் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு தீபமேற்றி வழிபட்டனர். இதில் கைலாய வாத்திய குழுவினரின் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சியும், யாழினி குழுவினரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | இலவச தரிசனத்துக்கு 48 மணி நேரம் காத்திருப்பு...மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருப்பதி!