தீபாவளி நெருங்குவதால் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது!

தீபாவளி நெருங்குவதால் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது!

சென்னையில் உள்ளவர்கள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்குச் செல்ல நேரடியாக செல்லும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால், புதுச்சேரிக்கு வருகை தந்து இங்கிருந்தும் வெளிமாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
Published on

புதுச்சேரியில் இருந்து தீபாவளி பண்டிகைக்காக வெளியூர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் பயணித்ததால் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது

தீபாவளி

நாளை மறு நாள் தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ளநிலையில் பண்டிகையை கொண்டாடுவதற்காக புதுச்சேரியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியூர்களுக்கு பயணமானார்கள். மேலும் சென்னையில் உள்ளவர்கள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்குச் செல்ல நேரடியாக செல்லும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால், புதுச்சேரிக்கு வருகை தந்து இங்கிருந்தும் வெளிமாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

பேருந்து நிலையத்தில் கூட்டம்

இதன் காரணமாக புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திலில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சீருடையில் இல்லாத காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக புதுச்சேரி மற்றும் தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் கூடுதல் விழாக்கால பேருந்தை இயக்குகின்றது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com