தீயில் முழுவதும் எரிந்து சேதமான டிரைவர் ஓட்டு வீடு...

தீயில் முழுவதும் எரிந்து சேதமான டிரைவர் ஓட்டு வீடு...

கார் ஓட்டுநர் கணேசன் ஓட்டு வீடு தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

தஞ்சாவூர் |  திருமஞ்சன வீதி கீழச்சந்தில் வசித்து வருபவர் கோவிந்தசாமி மகன் கணேசன் 59 இவர் ஆக்டிங் டிரைவராகவும் இவரது மனைவி சாவித்திரி வீட்டு வேலையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் வெள்ளிக்கிழமை என்பதால் வீட்டில் விளக்கு ஏற்றிவிட்டு அணைக்காமல் சென்று விட்டனர் இதன் மூலம் தீப்பற்றி ஓட்டு வீட்டின் மேல் பகுதி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை போராடி அனைத்தனர் மேலும் இது குறித்து கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com