தமிழ்நாட்டில் கடன் இல்லாத முதல் மாநகராட்சி... தஞ்சை மாநகராட்சி மேயர் பெருமிதம்..!

தமிழ்நாட்டில் கடன் இல்லாத முதல் மாநகராட்சி... தஞ்சை மாநகராட்சி மேயர் பெருமிதம்..!

தஞ்சை மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் தஞ்சை மேயர் சன்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கடன் இல்லாத முதல் மாநகராட்சி

கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் வைக்கப்பட்டன. புதிதாக மேற்கொள்ள உள்ள பணிகள் மற்றும் திட்டங்கள், தங்கள் பகுதிக்கு தேவையான திட்டங்கள் பற்றி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். 
இதற்குப் பின்பு கூட்டத்தில் பேசிய மேயர் சன் ராமநாதன் தமிழகத்தில் கடன் இல்லாத முதல் மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சி விளங்குவதாக அறிவித்தார்.

மேலும் படிக்க: முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டிய வைகோ...! எதற்காக தெரியுமா?

இதற்கு மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் ஆணையர் மாமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பே காரணம் என்றும் ஆணையரும் தாமும் கணவன் மனைவி போல் சேர்ந்து செயல்பட்டதால் தான் இது சாத்தியமானது எனவும் தெரிவித்தார்.

தஞ்சை மாநகராட்சி மேயர் பெருமிதம்

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் மிகப்பெரிய நிதி சுமையை மாநகராட்சிக்கு வைத்து சென்றனர் பொறுப்பேற்று ஆறு மாதத்தில் உலக வங்கியிடம் வாங்கிய ஐந்து கோடி மற்றும் சிறிது சிறிதாக வாங்கிய கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு கடன் இல்லாத மாநகராட்சியாக தமிழ்நாட்டில் தஞ்சை மாநகராட்சி திகழ்வதாக தஞ்சை மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் பெருமையுடன் தெரிவித்தார்.