சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார் புதுச்சேரி முதலமைச்சர்!

சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார் புதுச்சேரி முதலமைச்சர்!

புனரமைக்கப்பட்ட சுகாதார நிலையத்தை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். புதுச்சேரி, அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் சிதிலமடைந்து இருந்த நிலையில் ரூ. 46.00 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டது.

மேலும் படிக்க : தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வரும் புதுச்சேரி மக்கள்!

இந்நிலையில் புனரமைக்கப்பட்ட சுகாதார நிலையத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தொடர்ந்து புதிய ஆம்புலன்ஸ் சேவையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வர், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.