அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கோரிக்கை விடுக்கும் சமூக ஆர்வலர்கள்...!

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கோரிக்கை விடுக்கும் சமூக ஆர்வலர்கள்...!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவசர சிகச்சைக்காக வரும் நோயாளிகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக இன்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவு காணப்பட்ட நிலையில் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றும் ஊழியர் விடுப்பு எடுத்ததை காரணம் காட்டி எக்ஸ்ரே அறை மூடப்பட்டிருந்தது. இதனால் நோயாளிகள் எக்ஸ்ரே எடுக்க முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர். 

மேலும், நோயாளிகள் தனியார் எக்ஸ்ரே நிலையங்களை நாடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இதுபோன்று சம்பவங்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெறுவதால் தென்காசி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமான சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைத்திட அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com