தர்ம அடி வாங்கிய போதை ஆசாமி... நடந்தது என்ன?!

தர்ம அடி வாங்கிய போதை ஆசாமி... நடந்தது என்ன?!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியின் பின்புறம் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில், நாள்தோறும் 400 க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஆந்திரா, கர்நாடகா, மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் இயக்கப்படுகிறது,

இங்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் திருத்தணி பேருந்து நிலையம் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நேரக் காப்பாளர் பகுதியில் கையைப்பமிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் அலுவலகத்திற்கு எதிரே திருவள்ளூர் மற்றும் சென்னை செல்ல வேண்டிய அரசு பேருந்துகள் நின்று கொண்டிருந்தன.  இந்த இரண்டு அரசு பேருந்துகளிலும் பயணிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் அமர்ந்திருந்தனர்,

இவற்றுள் சென்னை செல்ல வேண்டிய பேருந்து முன்பாக தயாராக நின்று கொண்டு இருந்தது. அடுத்ததாக செல்ல வேண்டிய திருவள்ளூர் பேருந்து  அதற்கு பின்னால் நின்று கொண்டிருந்தது.  திடீரென்று இந்த பேருந்தில் ஒரு போதை ஆசாமி அந்த பேருந்தை எடுக்க முயற்சி செய்துள்ளார்.  இதனால் அந்த பேருந்து 20 அடி தூரம் நகர்ந்து முன் சென்றது.  அந்த போதை ஆசாமி அந்த அரசு பேருந்தில் ஸ்டேரிங்கை இயக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

திடீரென்று அந்த பேருந்து சென்னை செல்ல வேண்டிய பேருந்தில் மோத சென்றது, சென்னை செல்ல வேண்டிய பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் மக்கள் கூச்சலிட்டதால் அந்த பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் அந்த போதை ஆசாமி இயக்கிய பேருந்தை நிறுத்த முயற்சி செய்தனர்.  உடனடியாக சென்னை செல்ல வேண்டிய பேருந்தில் இருந்த பரந்தாமன் என்ற நடத்துனர் கைகளால் பிரேக் அழுத்தி போதை ஆசாமி இயக்க இருந்த அரசு பேருந்தை நிறுத்தினார்.  மேலும் அந்த போதை ஆசாமியை கீழே இறக்கி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, நேரக் காப்பாளர் அலுவலகம் அருகில் அமர வைத்தனர்,

இன்னும் ஒரு குவாட்டர் மிச்சம் இருக்கிறது, அந்த மதுபானத்தையும் அருந்திவிட்டு வருகிறேன் என்று அலப்பறை செய்து கொண்டு இருந்தார் அந்த போதை ஆசாமி உடனடியாக பொதுமக்கள் அதிகம் கூடுவதை கண்டவுடன் போதை ஆசாமி அந்த பகுதியிலிருந்து நைசாக கிளம்பி ஓடி விட்டார்.  இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  திருத்தணி பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் இந்த செயலை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் காவல்துறையினர் இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.  இந்த பகுதியில் இரவு நேரத்தில் பஸ் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் இருக்க மாவட்ட கண்காணிப்பாளர் ஆவணம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com