வரும் கல்வியாண்டில் ஐஐடியில் சேரும் மாணவர்களுக்கு விளையாட்டு இட ஒதுக்கீடு மூலம் சேர்க்கை...?

வரும் கல்வியாண்டில் ஐஐடியில் சேரும் மாணவர்களுக்கு விளையாட்டு இட ஒதுக்கீடு மூலம் சேர்க்கை...?

சென்னை தி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆகாச வாணி மற்றும் பிரசார் பாரதி சார்பில் ஜி 20 மாநாடு  குறித்த நிகழ்ச்சிகள் நிறைவு விழா நடைபெற்றது.தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, விஞ்ஞானி நம்பி நாராயணன் , இயக்குனர் பேரரசு ஆகியோர் பங்கேற்பு. மேலும் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி பின் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்வில் ஜி20 நிகழ்ச்சிகள் குறித்தான காணொளி ஒளிபரப்பப்பட்டது. ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி ’ஜி 20யும் கல்வியும்’ என்ற தலைப்பில் பேசினார். 

அப்போது பேசுகையில்,.. “ ஜி 20 மாநாடு குறித்து அமெரிக்கா 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை நிர்ணயித்தது. அவற்றில் பல சாதனைகளை இந்தியா வெற்றிகரமாக செய்துள்ளது.

ஜி 20 மாநாட்டின் கல்வி சார்ந்த கருத்தரங்கம்  முதலில்  சென்னை ஐஐடியில் தான் நடைபெற்றது அவற்றில் 19 நட்பு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். முக்கியமாக திறன், உயர்கல்வி குறித்து ஆராயப்பட்டுள்ளது.  இந்தியாவின் கல்வி முறையை  பல நாடுகள்  பாராட்டி உள்ளது. மேலும்  ஐரோப்பாவின் வருகைக்கு பிறகான கல்வியில் மாற்றம் நடைபெற்றது. அதன் பிறகு தற்போது  கல்வி முறை மாறி வந்து கொண்டிருக்கிறது.

அறம் செய்ய விரும்பு என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தோம். இப்போது பாபா பிளாக் ஷீப் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் பாரம்பரிய கல்வி  கற்றுத் தரப்பட வேண்டும். வருகிற கல்வியாண்டில் ஐஐடியில் சேரும் மாணவர்களுக்கு விளையாட்டு இட ஒதுக்கீடு மூலம் சேர்க்கை அறிமுகம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும், கர்நாடக இசையை அனைவருக்கும் கொண்டு சென்றதில் அகில இந்திய வானொலி நிலையம் மிகப்பெரிய பங்காற்றி இருக்கிறது”,  எனவும் தெரிவித்தார்.

இதையும்  படிக்க   | "கலாசாரம் தொியாமல் அமைச்சா்கள் இருப்பது வெட்கக்கேடு" - தமிழிசை சௌந்தரராஜன்