எக்கனாமிக் வகுப்பில் பயணித்த சோழர்கள்!

“பொன்னியின் செல்வன் - 1” ப்ரொமோஷனுக்காக விமானத்தில் ஒன்றாக பயணித்த படக்குழுவுடன், நடிகர்களும், ஏ.ஆர்.ரஹ்மானும் எக்கனாமிக் வகுப்பில் பயணம் செய்திருக்கின்றனர்.

எக்கனாமிக் வகுப்பில் பயணித்த சோழர்கள்!

1950களில் உருவான கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற புணைப்பு கதையினை படமாக்கி வரும் செப்டம்பர் 30ம், தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரமோஷன் வேலைகள் படு பயங்கரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது படத்தின் ப்ரொமோஷனுக்காக ஹைதராபாத், பெங்களூரு மற்றும் டெல்லி போன்ற இடங்களுக்கு ஒன்றாகவே பயணித்து வரும் படக்குழுவின் போட்டோக்கள் இணையத்தில் படு வைரலாகி வரும் நிலையில், தற்போது ஒரு போட்டோ இணையத்தில் படு ட்ரெண்டிங்கில் உள்ளது.

மேலும் படிக்க | ராஜராஜ சோழனுடன் ஐயப்பன் தரிசனம் பெற்ற நம்பி!

பெரும் நட்சத்திரங்களான த்ரிஷா, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வரியா ராய் ஆகியோருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும், விமானத்தில் எக்கனாமிக் பிரிவில் பயணம் செய்யும் போட்டோ அனைவரது கவனத்தையும் பெற்றது.

சோழர்கள் இப்படி மக்களுடன் பயணிக்கின்றனரே என்றும், தன்னடக்கம் மிக்க தென்னிந்திய நடிகர்கள் என்றெல்லாம் இந்திய சினிமா ரசிகர்களால புகழாரம் பெற்று வரும் நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு இதன் மூலம் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க | #EXCLUSIVE | எங்களுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை! - நடிகர் கார்த்தி

View this post on Instagram

A post shared by ARR (@arrahman)