ராஜராஜ சோழனுடன் ஐயப்பன் தரிசனம் பெற்ற நம்பி!

சபரிமலை ஐயப்பன் கோவிலில், தற்போது ஜெயம் ரவியும், ஜெயராமும் இணைந்து ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
ராஜராஜ சோழனுடன் ஐயப்பன் தரிசனம் பெற்ற நம்பி!
Published on
Updated on
2 min read

2008ம் ஆண்டு, தாம் தூம் என்ற படத்தில் ஒன்றாக இணைந்தனர் ஜெயம் ரவி மற்றும் ஜெயராம். முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த இந்த கூட்டணி, படத்தைத் தாண்டியும், நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல வருடங்களாக நிலைத்து நிற்கும் ஜெயராம், எப்போதும், ஆண்டு தவறாமல், சபரிமலை சென்று ஐயப்பன் தரிசனம் பெறுவது வழக்கம். அதனைப் பின்பற்றும் வகையில், கடந்த 2015ம் ஆண்டு, ஜெயம் ரவியும் அவருடன் இணைந்து சபரி மலைக்கு சேர்ந்து பயணிக்க துவங்கினர்.

ஆனால், கொரோனா காரணமாக இடையில் இரண்டு வருடங்கள் அவர்களால் சபரி மலைக்கு போக முடியாத நிலையில், இந்த ஆண்டு, பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரொமோஷனை ஒட்டி, சபரிமலைக்கு ஒன்றாக சென்று சாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.

அப்போது, “பொன்னியின் செல்வன் கதை படி, ராஜராஜ சோழனின் நிழல் போல, அவருடனேயே சென்று, அவருக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரு அமைச்சர் தான் ஆழ்வார்க்கடியான் நம்பி. அந்த நம்பியாக ராஜராஜ சோழனான ஜெயம் ரவியுடன் சாமி தரிசனம் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி” என பத்திரிக்கையாளரிடம் கூறினார். 

மேலும், ஐந்தாண்டுகளாக தொடர்ந்து சபரிமலைக்கு சாமி தரிசணம் செய்து வரும் ஜெயம் ரவி, ஜெயராம் கூட்டணி, பொன்னியின் செல்வன் படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் படு பயங்கரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்த தகவல் ரசிகர்களுக்கு படத்தின் மீதான் ஆர்வத்தை அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com