மீண்டும் தொடங்கியது இந்தியன் 2 படப்பிடிப்பு!

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடர இருக்கும் நிலையில், தற்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மீண்டும் தொடங்கியது இந்தியன் 2 படப்பிடிப்பு!

இந்திய 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடர இருக்கும் நிலையில், ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.

கமலஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில், ஷங்கர் இயக்கும் சீக்வல் படம் தான் இந்தியன் 2. 1996ம் ஆண்டு, கமல், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோண்ட்கர் உட்பட பல பெரும் நடிகர்கள் நடித்த இந்த படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படபிடிப்பு, முன்பே தொடங்கியதாகக் கூறப்பட்ட நிலையில், இடையில் ஒரு சில காரணங்களால் படபிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது. அதில் முக்கியமான காரணமே, படபிடிப்பில் நடந்த பயங்கர விபத்து தான்.

மேலும் படிக்க | இந்தியன் 2 - க்கு தயாராகி வரும் காஜல் அகர்வால்! குதிரையில் சவாரி செய்த வீடியோ வைரல்!!!

Shooting of Kamal Haasan's 'Indian 2' resumed post two-year hiatus

பல உதவி இயக்குனர்களும், நடிகர்களும் தங்களது உயிர்களை பலி கொடுத்த நிலையில், படப்பிடிப்பை சில நாட்களுக்கு ஒத்திவைத்தது படக்குழு. அதற்குள், கோரோனா தடுப்புகள் உருவாக்கப்பட்டு, தளர்க்கப்பட்டு, பின், காஜல் அகர்வாலுக்கு திருமணமாகி, குழந்தையும் பிரந்து விட்டது. மற்றொரு பக்கம், கமல், லோகேஷ் கனகராஜுடன் விக்ரம் என்ற பான் இந்தியா படம் எடுத்து அதன் மூலம் மாபெரும் வெற்றியும் கண்டுவிட்டார்.

மேலும் படிக்க | “நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது” - கமல்ஹாசன்!!!

இந்நிலையில், படம் கைவிடப்பட்டதாக பல வதந்திகள் கிளம்பிய நிலையில், படத்தின் மீதான கவலை மக்கள் மத்தியில் உருவாகத் துவங்கியது. தற்போது அந்த கவலைகளைத் தீர்க்கும் வகையில், ஒரு வீடியோவை, கமலஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Indian 2: Three writers roped in for Kamal Haasan-Shankar film - Movies News

அதில், முறுக்கு மீசை மற்றும் சாள்ட் பெப்பர் ஸ்டைலில் கம்பிரமாக இருக்கும் கமலுக்கு கை கொடுக்கிறார் ஷங்கர். அந்த வீடியோ மூலம், படபிடிப்பு மிண்டும் தொடர இருப்பது தெரிகிறது. அது மட்டும் இன்றி, சமீபத்தில், காஜல் அகர்வால் குதிரை சவாரி பயிற்சி பெறும் வீடியோவை, தனது சமூக வலைதளங்கலில் பதிவிட்ட நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மீண்டும் மக்கள் மத்தியில் உருவாகி இருப்பது தெரிகிறது.