ஒல்லியாக இருந்தால் மட்டும் தான் அழகா ? பாடி ஷேமிங் என்ற ஒன்றையே மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இஞ்சி இடுப்பழகி

இன்றைய சமூகத்தின் வதந்திகள்: இன்று இருக்கும் இளைஞர்களுக்கு தனது தோற்றத்தை குறித்து ஒரு தாழ்வுமனப்பான்மை உண்டு அதை உருவாக்கியது இந்த சமூகம்தான். ஒல்லியாக, சிகப்பாக, கூந்தல் நீளமாக இருந்தால்தான் பெண்களுக்கு அழகு என்று ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கிவைத்திருக்கிறது நம் சமூகம்.
ஒல்லியாக இருந்தால் மட்டும் தான் அழகா ? பாடி ஷேமிங் என்ற ஒன்றையே மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட  இஞ்சி இடுப்பழகி
Published on
Updated on
1 min read

பாடி ஷேமிங்:

வழக்கமாக நாம் வெளியே செல்லும்போது நமக்கு தெரிந்த நண்பர்களையும் உறவினர்களையும் சந்திப்பது உண்டு.  நம்மை நலம் விசாரிப்பதுபோல் விசாரித்துவிட்டு அவர்கள் கருத்தை நம்மீது திணிப்பார்கள்.  ஏன் இப்படி இளைச்சு போயிட்ட? சரியா சாப்பிடுறது இல்லையா? என்று அவர்களிடம் இருந்து வரும் வார்த்தைகள் அவர்களை அறியாமலேயே அவர்கள் மனதில் பதிந்துவிடுகிறது.  பருமனாக இருப்பவர்களை கண்டால் அவர்களுக்கு உடல் இழைக்க டிப்ஸ் கொடுப்பதாக நினைத்து அவர்கள் தோற்றத்தை விமர்சித்து அவர்களின் தன்னம்பிக்கையை இழக்க செய்து விடுகின்றனர்.  இதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படமே ஆர்யா மற்றும் அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடித்த இஞ்சி இடுப்பழகி.  

இஞ்சி இடுப்பழகி:  
 
இஞ்சி இடுப்பழகி 2015 இல் பிரகாஷ் கோவலமுடி இயக்கத்தில்  ஆர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஊர்வசி,மற்றும் பிரகாஷ் ராஜ் போன்ற நட்சத்திரங்கின் நடிப்பில் வெளியான திரைப்படம்.  பாடி ஷேமிங்கை எதிர்த்து அகத்தின் அழகே  நிலையானது என்ற ஆழமான கருத்தை மக்களுக்கு புரியவைத்தது இந்த படம். படத்தின் கதாநாயகியான அனுஷ்கா ஷெட்டி (சுவீட்டி) மிகவும் பருமனாக இருக்கிறார்.  இவரை பெண்பார்க்க வரும் அனைத்து ஆண்களும் உடல் எடையை காரணம் சொல்லி தட்டிக்கழித்து விடுகிறார்கள்.  இதனால் சுவீட்டியின் தாய் மிகவும்  வருந்துகிறார்.  சுவீட்டியை பெண்பார்க்க வரும் கதாநாயகன் ஆர்யா(அபிஷேக் )என்பவரை  சுவீட்டியை நிராகரித்து விடுகிறார்.  பின் இருவரும் நண்பர்களாக பழகத்தொடங்க சுவீட்டி அபிஷேக் மீது  காதல் கொள்கிறாள். 

அபிஷேக் சிம்ரன் எனப்படும்  ஒல்லியாக  இருக்கும் பெண்ணை காதலிக்கிறான்.  இதனால் தனது உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்று  சைஸ் ஷீரோ என்ற கிளினிக்கில் சேர்கிறாள் சுவீட்டி.   அங்கே அவளது தோழியை சந்திக்கிறாள்.  சில நாட்களுக்கு பிறகு அவளுக்கு  அங்கே கொடுக்கப்பட்ட மாத்திரைகளால்  சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு போராடுவதை கண்ட அவள் இதை கண்டித்து சைஸ் ஷீரோ கிளினிக்கை எதிர்த்து போராடி தனது தோழியை காப்பாற்றுகிறாள்.

உருவம் என்பது நமக்கு கடவுள் கொடுத்தது.  அதை  மாற்றகூடாது.  ஒல்லியாக இருந்தால் தான் அழகு என்ற மாயையிலிருந்து வெளியே வாருங்கள்.  அகத்தின் அழகே நிலையானது மற்றும் நிரந்திரமானது என்ற கருத்தை கூறி நிறைவு செய்ந்திருப்பர் இயக்குநர்.  இந்த படம் இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதுடன்  பாடி ஷேமிங் செய்துவந்த பூமெர்ஸ்க்கு நல்ல புத்தியையும் புகட்டியது இஞ்சி இடுப்பழகி.

--சுவாதிகா ரெங்கராஜன் .

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com