மனநல போராட்டம் குறித்து மனம் திறந்தார் விராட் கோலி!!!

இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி இந்திய அணியை முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றவர்.  அவர் தனது வாழ்க்கை முழுவதும் அவருடைய மனதுடன் போராடியதாக பேட்டியளித்துள்ளார்.

மனநல போராட்டம் குறித்து மனம் திறந்தார் விராட் கோலி!!!

கிரிக்கெட் ஆர்வலர்களிடையே பேட்டிங்கிற்காக நற்பெயரை வாங்கியவர் 33 வயதான விராட் கோலி. ஐந்து நாட்கள் தரவரிசையில் இந்திய அணியை முதலிடத்திற்கு கொண்டு சென்றவர்.  

இந்திய ஊடகங்களால் ’கிங்’ கோலி என அழைக்கப்பட்டவர் சில வருடங்களாக அவருடைய மோசமான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.  டி20 உலக கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர் கடந்த ஆண்டு அனைத்து போட்டிகளிலும் கேப்டன் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டார்.

கோலி பேட்டி:

செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி அவருடைய விளையாட்டு வாழ்க்கையின் அழுத்தம் சில நேரங்களில் அவரது மனநலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.

கோலியை ஆதரிக்கும் நேசிக்கும் நபர்கள் நிறைந்த அறையில் கூட அவர் தனிமையாக உணர்ந்ததாக கூறியுள்ளார்.  இந்த அனுபவம் பலரது வாழ்க்கையில் நிச்சயம் நடந்திருக்கும் எனவும் அவர் பேசியுள்ளார்.

இது ஒரு தீவிரமான பிரச்சினை எனவும் எல்லா நேரங்களிலும் வலுவாக இருக்க முயற்சி செய்திருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

விளையாட்டு வீரர்கள் ஓய்வெடுத்து விளையாட்டின் அழுத்தங்களில் இருந்து மீண்டு நிலையான மனநிலையை அடைவது மிக முக்கியமானது என தெரிவித்துள்ளார்.

உலகின் அதிக சம்பள்ம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான கோலி 2019க்கு பிறகு எந்த வடிவத்திலும் சதம் அடிக்கவில்லை.

சமீபத்திய மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ஓய்வளிக்கப்பட்ட நிலையில் ஆசிய கோப்பைக்கான டி20  அணியில் இடம்பெற்றுள்ளார்.