எது? கில்லி ஜோடி இனி இல்லையா? அப்போ 14 வருஷ தவம் எல்லாம் வீணா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 67’ படமான ‘லியோ’ படத்தில் இருந்து நடிகை த்ரிஷா வெளியேறியதாக் தகவல்கள் பரவி வருவதால் ரசிகர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

எது? கில்லி ஜோடி இனி இல்லையா? அப்போ 14 வருஷ தவம் எல்லாம் வீணா?

எத்தனை படங்கள் பார்த்தாலும், அதில் மனதை கவரும் நடிகர்கள் ஒரு சிலராகவே இருப்பர். அதிலும், தனி தனியாக எத்தனை நடிகர்களுக்கு ரசிகர் கூட்டம் இருந்தாலும், ஒரு ஜோடிக்கு ரசிகர் கூட்டம் இருப்பது மிகவும் அரிது.

அப்படிப்பட்ட ஜோடிகளில் சில குறிப்பிடத்தக்க ஜோடிகள் மறைந்த நடிகர்கள், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா, சிவாஜி கணேசன் - சரோஜா தேவி, ஜெமினி கணேசன் - சாவித்திரி, ரஜினி - ராதிகா, கமல் - ஸ்ரீதேவி போன்றவர்கள் தான். இந்த நடிகர்களுடன் மற்றவர்கள் நடித்தாலும் சிறப்பாக தான் இருக்கும். ஆனால், இந்த ஜோடிகளுக்கான ரசிகர் கூட்டம் வெறித்தனமானவையாக இருக்கும்.

அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி தான் விஜய் - த்ரிஷா ஜோடி. ‘கில்லி’ என்ற சூப்பர் ஹிட்டைத் தொடர்ந்து மிகவும் ராசியான ஜோடி என அழைக்கப்பட்ட விஜய் - த்ரிஷா ஜோடி, பல படங்களை ஹிட்டாக்கியது என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க | “நான் வெறும் நடிகன் தான்” - நடிகர் விஜய் சேதுபதி...

ஆனால், என்ன காரணங்களாலோ, பல ஆண்டுகளாக இந்த ஜோடி மீண்டும் ஒன்று சேரவேயில்லை. இருவரும் தனி தனியே தங்களது திரை பயணத்தைத் தொடர்ந்த நிலையில், ஆண் நடிகர்களில் விஜய்-ம், நடிகைகளில் த்ரிஷாவும் தங்களுக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில், இது வரை த்ரிஷாவிற்கு ஒரு வேளை பிடிக்காதவர்கள் இருந்தாலும், பொன்னியின் செல்வனின் ‘குந்தவை’ பிராட்டியாராக நடித்து அனைத்து உள்ளங்களையும் கவர்ந்து விட்டார் நமது த்ரிஷா.

அதே போல, எப்போதும் பாக்ஸ் ஆபீஸ் தலைவராக இருக்கும் தளபதி விஜய், வெற்றி இயக்குனரான லோகேஷ் கனகராஜுடன் இணைந்து தற்போது படம் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியானதில் இருந்து ரசிகர்களுக்கு குஷி வானத்தை முட்டும் அளவில் இருந்தது.

மேலும் படிக்க | அப்போ விக்கி நயன் அஜித் படத்தில் இல்லையா?

பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு படம் குறித்த அப்டேட்டுகளாக் அகுவியும் என தெரிவிக்கப்பட்டதில் இருந்து வெகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு, விஜய் - உடன் த்ரிஷா தான் ஜோடி என தெரிந்ததில் இருந்து வானம் மற்றும் பூமி எதுவென தெரியாத அளவில் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வந்தனர்.

அது மட்டுமின்றி தியேட்டர் ஓனர்களுக்கு இந்த வெற்றிக் கூட்டணி பெரும் லாபம் என்பதால் அனைவரும் படு குஷியில் இருந்தனர். இந்நிலையில், படத்தில் இருந்து த்ரிஷா 3வது நாளே விலகி விட்டார் என்றும், காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பி விட்டார் என சென்னை விமான நிலையத்தில் அவரது போட்டோவும், லியோ குறித்த அப்டேட்டுகளை தனது சோசியல் மீடியாக்களில் இருந்து விலக்கியதாகவும் பல தரப்பில் இருந்து வதந்திகள் கிளம்பின.

மேலும் படிக்க | பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரன் இன்று காலமானார்...!

அவ்வளவுதானா? இனி கில்லி ஜோடி இல்லையா? ஏமார்ந்து விட்டோமே என்றெல்லாம், ரசிகர்கள் கண்கலங்கிய நிலையில், அதெல்லாம் வெறும் வதந்திதான் என தெரியவந்துள்ளது. நடிகை த்ரிஷா விமான நிலையத்தில் இருப்பது போல இருக்கும் போட்டோவானது பழைய புகை படம் என்றும் காஷ்மீரில் நடக்கும் லியோ படபிடிப்பில் இருந்து த்ரிஷா கிளம்பவேயில்லை என்றும் தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு மன நிம்மதி அளித்துள்ளது.

14 வருடங்களாக காத்திருந்து தவம் செய்து மீண்டும் அந்த அழகான ஜோடியை மீண்டும் திரையில் காண காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு சின்ன வதந்தி பெரும் பதற்றத்தைக் கொடுத்த நிலையில், அது வெறும் வதந்தி தான் என தெரியவந்ததும் நிம்மதி வந்துள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

விக்ரம் படம் மூலம், தனக்கென ஒரு தனி பிரபஞ்சத்தையே உருவாக்கிய லோகேஷின் இந்த படம் ‘லியோ’, ஒரு தனிக்கதையா? இல்லை அதே பிரபஞ்சத்தில் வரும் படமா என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் பயங்கரமாக உள்ள நிலையில், லியோ குறித்த சிறு சிறு அப்டேட்டுகளும் ரசிகர்களுக்கு பெரும் குஷியைக் கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம்...!