இவள் தென்னிந்திய ஏஞ்சலீனா ஜோலி! - நயனை மெச்சிய விக்கி!

இவள் தென்னிந்திய ஏஞ்சலீனா ஜோலி! - நயனை மெச்சிய விக்கி!

கடந்த ஜூன் 9ம் தேதி பல கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க, பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஈசிஆர்-இல் ஒரு தனியார் விடுதியில் நடந்த அவரது திருமணம் குறித்த தகவல்கள் மட்டுமே வெளியான நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், முழுவதுமாக அவர்களது திருமண வீடியோ மற்றும் போட்டோக்களுக்கு உரிமம் பெற்று விட்டது. இந்நிலையில், தற்போது அத்திருமணத்தின் வீடியோவை படமாக வெளியிட இருக்கும் நிலையில், அதன் டீசரை வெளியிட்டிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.

“ஏன் நயன்தாரா?” என்ற கேள்வியை விக்னேஷ் கேட்பதில் இருந்து துவங்கும் இந்த டீசரில், “ஏஞ்சலீனா ஜோலியையும் இதே கேள்வி தான் கேட்டார்கள். ஆனால், அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் இல்லையே! என்ன கேள்வி இது சார்?” என விக்கி வெட்கம் கொள்கிறார். “பியோண்ட் தி ஃபேரிடேல்” என தலைப்பிடப்பட்ட இந்த டீசர், நயன்தாராவின் அழகான காதல் கதையை விவரிக்கிறது.

தன்னை “லேடி சூப்பர் ஸ்டார்” என அழைக்கும் ரசிகர்கள் குறித்து பேசிய நயன்தாரா, “எனக்கு இந்த பட்டங்கள் மீதும் டாக்-கள் மீதும் நம்பிக்கை இல்லை! நான் ஒரு சாதாரண பெண். எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி வந்த நான், எதிலும் முழு வீச்சில் இறங்க முயற்சி செய்வேன். அதன் பலனாக தான் இன்று நான் இருக்கும் இடமாக இருக்கிறது.” என தன்னடக்கத்துடன் பேசினார்.

நயன்தாரா என்பதை விட, அவர் ஒரு சிறந்த மனிதர் என மொச்சிய விக்கியுடன் முடிகிறது டீசர். சமீபத்தில், தனது கணவரின் பிறந்தநாளை துபாயில் சிறப்பாக கொண்டாடிய நயன்தாரா, அட்லீயுடன், ஷாருக்கானுக்கு கதாநாயகியாக “ஜவான்” என்ற படத்தில் நடிக்க இருக்கும் நிலையில், பாலிவுட் ரசிகர்கள் நநயன்தாராவிற்காக வெகுவாக காத்து வருகின்றனர். இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன், நயன்தாரா மீதான எதிர்பார்ப்பையும், ஒரு பிம்பத்தையும் உருவாக்குவதாக இண்டஹ் டீசர் குறித்து நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து எப்போது அவர்களது திருமண வீடியோவை நேரில் பார்க்கப்போகிறோமோ என்ற ஆர்வம், இந்திய சினிமா ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com