விநாயகர் சதுர்த்திக்கு 19 கோடியில் புதிய வீடாம்!!! கலக்கறே கோலி!!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இணைந்து 19 கோடிகளுக்கு வீடு வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அவர்களரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
விநாயகர் சதுர்த்திக்கு 19 கோடியில் புதிய வீடாம்!!! கலக்கறே கோலி!!!

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது காதல் மனைவி அனுஷ்கா ஷர்மா, அனைவருக்கும் ‘கபிள் கோல்ஸ்’ அளித்து வரும் நிலையில், தற்போது ஒரு புதிய வீடு வாங்கியுள்ளனர். அதுவும் விநாயக சதுர்தியை முன்னிட்டு மும்பையில் அவர்கள் வீடு வாங்கியுள்ள செய்தி இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் நெகிழ்ச்சியில் உள்ளனர்.

தற்போது ஆசிய கோப்பைகள் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இறுதி நொடி வரை பதை பதைக்க வைத்த சம்பவம் தொடர்ந்து, ஹாங்காங்கிற்கு எதிரான போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. அதிலும், இந்தியா வெற்றி அடைந்ததால், மக்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பு அதிகரித்துள்ளது.

விராட் அனுஷ்கா ஜோடிக்கு, வமிகா என்னும் தேவதை பிறந்தது முதல், அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தப்படியாகவே இருக்கிறது என்றே சொல்லலாம். அனுஷ்கா, தனது ப்ரொடக்‌ஷன் நிறுவனமான 2013 நிறுவப்பட்ட ‘க்ளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்று முழு நேர நடிகையாக முடிவெடுத்தார். மேலும், விராட் சென்சூரிகளும் அடித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

இந்நிலையில், தற்போது விராட் கோலி மற்றும் அவரது காதல் மனைவி அனுஷ்கா ஷர்மா, மும்பையில், அலிபாக் என்ற பகுதியில், ஒரு Farm House வாங்கியுள்ளனர். சுமார் 8 ஏக்கர் பரப்பளவில், சிராத் என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள அவர்களது வீடு, கிட்டத்தட்ட 19.24 கோடி ரூபாய் மதிப்புடையது. இதன் பதிவிற்கு, 1.15 கோடிகள் செல்வானது குறிப்பிடத்தக்கது.

விராட் ஆசிய கோப்பை போட்டிக்காக துபாயில் இருப்பதால், பரிவர்த்தனையை விராட் கோலி சகோதரர் விகாஸ் கோலி முடித்தார். முத்திரைத் தொகையாக ரூ.3.35 லட்சம் டெபாசிட் செய்ததாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் தான் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே, தங்களது புதிய 5 பி.எச்.கே வீட்டிற்கு கிரகபிரவேசம் நடத்தினர். 2021 ஆம் ஆண்டில், தீபிகாவும் ரன்வீரும் 5 BHK பங்களாவை ரூ. 1.32 கோடி முத்திரைக் கட்டணத்துடன் ரூ.22 கோடிக்கு வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. மாப்கான் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த வீடு 9,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. தீபிகா ரன்வீர் ஜோடி மற்றும் விராட் அனுஷ்கா ஜோடிகளைத் தவிர, பாலிவுட் பாத்ஷாவான ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரிகான் ஆகியோரும் அலிபாக்கில் புது சொத்துகள் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, விராட்டிற்கும், அனுஷ்காவிற்கும் அனைத்து நெட்டிசன்களும் ரசிகர்களும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com