தோல்வியுற்றதா ஆபரேஷன் லோட்டஸ்....!!!!ஆபரேஷன் சேறாக மாறிய கதை!!!!

தோல்வியுற்றதா ஆபரேஷன் லோட்டஸ்....!!!!ஆபரேஷன் சேறாக மாறிய கதை!!!!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீது மத்திய அரசு பொய் வழக்குகளை மேலும் சுமத்தும் என கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.

சிபிஐ ரெய்டு:

டெல்லி கலால் வரிக் கொள்கை தொடர்பாக அவரது துணைத் தலைவர் மணீஷ் சிசோடியாவின் வீட்டில் மத்திய புலனாய்வுப் பிரிவு  நடத்திய சோதனையில், மத்திய ஏஜென்சியால் ஒரு பைசா கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

“14 மணி நேரம் சோதனை தொடர்ந்தது, ஆனால் ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. நகைகள் எதுவும் கிடைக்கவில்லை, பணம் எதுவும் கிடைக்கவில்லை, எந்த நிலம் அல்லது சொத்து பற்றிய ஆவணங்களும் கிடைக்கவில்லை மற்றும் குற்றவியல் ஆவணம் எதுவும் கிடைக்கவில்லை - எதுவும் கிடைக்கவில்லை. இது பொய்யான குற்றச்சாட்டு” என்று டெல்லி முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஆபரேஷன் லோட்டஸ் டூ ஆபரேஷன் சேறு:

அவர்கள் பல எம்எல்ஏக்களை உடைத்ததாக கூறி வருகின்றனர் எனவும் மக்களிடம் இருந்து அவருக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாகம் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.  மேலும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மக்கள் அவரிடம் கேட்பதாகவும் பேசியுள்ளார். பாஜகவின் ஆபரேஷன் தாமரை இங்கே ஆபரேஷன் சேறாக மாறியது என்பதை மக்களுக்கு காட்ட ஒரு நம்பிக்கைத் தீர்மானத்தை மக்களவையில் கொண்டு வர விரும்புகிறேன் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மேலும் படிக்க:  டெல்லியில் மலருமா தாமரை....ரெய்டு அரசியலை கையிலெடுத்த பாஜக.....பின்வாங்குமா ஆம் ஆத்மி....

ஒற்றுமையே வலிமை:

”ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக அனைத்து தேச விரோத சக்திகளும் ஒன்று சேர்ந்துள்ளன, எங்களுடையது மிகவும் வலிமையான அரசாங்கம். இந்த சக்திகள் எங்களை உடைக்க நினைக்கின்றன ஆனால் எங்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள்.” என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

பணவீக்கம் விமர்சனம்:

277 எம்எல்ஏக்கள் பாஜக கட்சிக்கு  வந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.  ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ.20 கோடி கொடுத்திருந்தால், ரூ.5,500 கோடிக்கு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளனர்.  இவ்வாறு சாமானியர்களின் எல்லாப் பணத்தையும்  எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கப் பயன்படுத்துவதால் தான் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது,” என்றும் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

சீரியல் கில்லரான பாஜக:

மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை பாஜக தொடர்ச்சியாக கவிழ்ப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.  தலைநகரில் ஒரு கொலைக்குப் பிறகு தொடர் கொலைகள் செய்யும் ஒரு சீரியல் கில்லர் இருப்பதாகக் கூறியுள்ளார்.

நாட்டில் இன்றுவரை கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, அசாம், மத்தியப் பிரதேசம், பீகார், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் பல அரசுகளை பாஜக கவிழ்த்துள்ளது எனவும் டெல்லி சட்டப்பேரவையில் கெஜ்ரிவால் பேசியுள்ளார். தொடர் கொலைகாரன் ஒருவன் ஒன்றன் பின் ஒன்றாக கொலை செய்வான் அதைப்போல மக்கள் ஒரு அரசாங்கத்தை தேர்வு செய்கிறார்கள் அவர்கள் அதை தொடர்ச்சியாக கவிழ்த்து வருகிறார்கள். எனவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

நம்பிக்கை தீர்மானம்:

கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், ஆம் ஆத்மி அரசு திங்கள்கிழமை மக்களவையில் நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டுவரவுள்ளது, அதற்காகவே, டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  மூத்த தலைவர்களை வெளியேற்றும் காங்கிரஸ்....இளைஞர்களை கொண்டு மீண்டும் கட்டமைக்கப்படுமா!!!!