முதல்முறையாக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக.....

முதல்முறையாக  சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த  ஒருவர் சபாநாயகராக.....

நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கும்  மகத்தான வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதனையடுத்து, நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமைய்யா கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார். 

இதனையடுத்து, முதலமைச்சர் சித்தராமையா தலைமையில், துனை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் மற்றும்  எம்.பி.பாட்டில், டாக்டர் பரமேஸ்வர், முனியப்பா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மற்றும், கர்நாடக மாநில சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக யு.டி.காதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் ஆர்.வி.தேஷ்பாண்டே பதவிப் பிரமானம் செய்து வைத்தார். 

இதையும் படிக்க      |  பழனி முருகன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை முடிந்தது..! வெளிநாட்டு கரன்ஸிகள் காணிக்கை...!

இந்நிலையில், புதிய சபாநாயகராக யு.டி. காதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த யு.டி.காதர், இவர் மங்களூரு தொகுதியில் இருந்து 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.  முதல்முறையாக ஒரு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க      |  மக்களை படிக்க வைப்பதற்கு பதிலாக...குடிக்க வைக்கும் அரசாக செயல்படுகிறது திமுக அரசு...ஓபிஎஸ் கண்டனம்!