விடுதலை நாளில் பறிபோன சுதந்திரம்!!!

விடுதலை நாளில் பறிபோன சுதந்திரம்!!!

குஜராத் வன்முறை:

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 59 பேர் கொல்லப்பட்டதால் குஜராத்தில் கலவரம் வெடித்தது.  இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.  இதிலிருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு இடங்களுக்கு தப்பித்து சென்றனர்.

பில்கிஸ் பானோ:

தப்பித்து சென்ற குடும்பங்களில் பில்கிஸ் பானோவின் குடும்பமும் ஒன்று.  தப்பி செல்லும் போது ஒரு கலவர கும்பல் அவர்களை தாக்க தொடங்கியது.  இந்த தாக்குதலில் பில்கிஸ் பானோவின் மகள் உட்பட் 7 பேர் கொல்லப்பட்டனர்.  அப்போது பானோ 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.  பானோ கலகக்காரர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை:

உச்சநீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் சிபிஐ-டம் வழக்கு வழங்கப்பட்டது.  அவர்கள் விசாரணையின் முடிவில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

தண்டணை:

கைது செய்யப்ப்ட்ட குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

விடுதலை வேண்டி வேண்டுகோள்:

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முன்கூட்டியே விடுதலை வேண்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  நீதிமன்றத்த்டின் அறிவுறுத்தலின் படி சுஜல் மைத்ரா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

சுஜல் மைத்ரா குழு:

வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 11 குற்றவாளிகளையும் விடுவிக்க ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார் சுஜல் மைத்ரா.  இந்த் பரிந்துரை மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அவர்களை விடுவிப்பதற்கான உத்தரவும் கிடைத்தது எனவும் அவர் தெரிவித்தார்.

விடுதலை:

சுஜல் மைத்ரா குழு பரிந்துரை அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு 11 குற்றவாளிகளும் சுதந்திர நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இம்மாதிரியான கொடூரமான குற்றங்களை செய்தவர்களை விடுவிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய நீதி அமைப்பின் மீதான நம்பிக்கை குறையும் என மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

பில்கிஸ் பானோ குடும்பம் கவலை:

குற்றவாளிகளின் விடுதலை பெருத்த ஏமாற்றமும் கவலையும் அளிப்பதாக பில்கிஸ் பானோவின் குடும்பம் தெரிவித்துள்ளது.  நீதிமன்றத்தின் மீதிருந்த நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.  மேலும் விடுதலை குறித்து அவர்களிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பொதுமக்கள் கருத்து:

இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவை பெருமையாக கொண்டாடும் வேளையில் கொடூரமான செயல்கள் செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது மக்களின் சுதந்திர உரிமையை கேள்விகுறியாக்கியுள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  நாடு முழுவதும் பெருமளவில் கண்டனம் எழுந்து வருகிறது.

இதையும் படிக்க: தொடர்ந்து 9 வது முறையாக கொடியேற்றி உரையாற்றினார் பிரதமர் மோடி!