இந்திய அமெரிக்க விமானப்படை கூட்டுப்பயிற்சி நிறைவு...!!

இந்திய அமெரிக்க விமானப்படை கூட்டுப்பயிற்சி நிறைவு...!!

இந்திய விமானப்படை மற்றும் அமெரிக்க விமானப்படை இடையே கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த விமான பயிற்சி நிறைவடைந்தது. 

இந்திய விமானப்படை மற்றும் அமெரிக்க விமானப்படை இடையே  கடந்த 13ஆம் தேதி கோப் இந்தியா -2023 பயிற்சி தொடங்கியது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கலைகுண்டா, பனகர் விமானப்படை நிலையம்  மற்றும் ஆக்ரா விமானப்படை நிலையங்களில் இந்த கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.  

அமெரிக்க விமானப்படையால் பயன்படுத்தப்படும் ராக்வெல் B1 லான்சர், எப் -15 ரக விமானங்கள் இதில் பங்கேற்றன. இந்திய விமானப்படை  சார்பில் ரஃபேல், தேஜாஸ், சு-30எம்கேஐ, ஜாகுவார், சி-17 மற்றும் சி-130 போன்ற முன்னணி இந்திய விமானப்படை விமானங்கள் பங்கேற்றன. மேலும் சி-130, எம்.சி-130 ஜே, சி-17 மற்றும் B1B உள்ளிட்ட மூலோபாய குண்டுவீச்சு விமானங்களும் இதில் பங்கேற்றன. கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த இரு நாட்டு படைகளிடையேயான கூட்டு விமான பயிற்சி தற்போது நிறைவடைந்துள்ளது.

இதையும் படிக்க:நிறுத்தி வைக்கப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா...! அடுத்தது என்ன...?